உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. சிங்கமுகாசுரன் வதை 437 கூட்டத்தை அழித்தன. சில அம்புகன் மேகத்தைப் பிளந்தன. கடலைச் சுவற அடித்தன. சூரியனுடைய தேரைப் பிளந்தன. கடலுக்கு அடியிலுள்ள வடவாமுகாக்கினியை விழுங்கின. அமரர்களு டைய உலகத்தைப் பிளந்தன. பூமியைப் பிளந்தன. இப்படிப் பல வகையான முறைகளில் அந்த அம்புகள் வேலை செய்து கொண் டிருந்தன. கார்பி ளந்திடும்; அளக்கரை உண்டிடும்; கதிரோன் தேர்பி வந்திடும்; வடவையை விழுங்குறும்; தேவர் ஊர்பி ளந்திடும்; மேருவைப் பிளந்திடும்; உலவாப் பார்பி ளந்திடும், ஞானநா யசுன்விடும் பகழி. [அளக்கரை -கடவினை. உ.லிவா - (சிங்கமுகாசுரன். 387.) எங்கும் உலவி. புகழி - அம்பு,) மேலே சூழ்ந்து கொண்டிருக்கிற எல்லா அண்டங்களுக்கும் சென்று அந்த அம்புகள் அங்கங்கே ஒலிகளைச் செய்தன. மாயை யினால் மிகப் பெரிய வடிவத்தை எடுத்துக் கொண்டிருந்த சிங்கமுகா சுரன் மயங்கி, உணர்வு அழிந்து, செயலற்றுத் தன் தேரின் மேலே நின்றான். மீஉ யர்ந்துசூழ் அண்டத்தின் அளவெலாம் விரவ வண்மையில் கொண்டிடு பெருந்தகை வடிவம் தூயன் வாளிகள் பட்டுஉணர்வு அழிதலால் தொலைந்து சீய மாமுகள், தொன்மைபோல் நின்றனன் தேர்மேல். (சிங்கமுகாசுரன்.398.) [மீ - மேலே. பெருந்தகை - சிங்கமுகன். சீயமாமுகன் - சிங்கமுகன்.) அப்போது முருகன் அவனுடைய தேரையும் அழித்தான். கீழே நின்றபடியே கிங்கமுகாசுரன் தண்டு சூலம் முதலியவற்றை வீசினான். அவன் அவ்வாறு செய்வதைக் கண்ட முருகன், இரண் டாயிரம் அம்புகளை விட்டு, அவனுடைய இரண்டாயிரம் கைகளையும் அறுத்தான். அப்படி அறுக்க அறுக்க அவன் கைகள் முளைத்துக் கொண்டிருந்தன. சிங்கமுகாசுரனுடைய தோள்களை அரிந்தான். கிரங்களை அரிந்தான். தேவர்கள் குதூகலித்தார்கள். திரும்பத் திரும்ப அவை முன் போலவே முளைத்தெழுந்தன. அதைக் கண்டு தேவர்கள் துன்புற்றார்கள்.