உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 கந்தவேள் கதையமுதம் படையில் அந்த நான்கையும் நினைந்து குறிப்பாக நக்கீரர் பாடுகிறார். இளமை, அழகு, மணம், அருள் என்பவை அந்த நான்கு. - "மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி" மணம் என்பது ஞான மணம் ; தெய்வத்து ; அருள்; இள - இளமை; நலம் என்பது அழகு. முருகப் பெருமான் என்றைக்கும் அழியாத அழகு உடையவன். "என்றும் இளையாய் அழகியாய்" என்ற பழைய பாட்டு ஒன்று சொல்கிறது. சோதி வடிவத்தை உடைய ஆண்டவனைப் பார்க்கப் பார்க்கச் சூரபன்மாவினுடைய கண் கூசவில்லை. மேலும் மேலும் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் மீதூர்ந்தது. இப்போது முருகப் பெருமானுடைய அழகைப் பற்றிச் சொல்கிறான். உலகத்தில் அழகைப் பற்றி எண்ணும்போது மன்மதன் நினைவு வருகிறது. அவனை அழகுக்கு அரசன் என்று சொல்வார்கள். அவனுக்கும், இவனுக்குந்தான் எத்தனை வேறு பாடு! வேள் என்ற பெயர் காமனுக்கும் உண்டு. முருகப் பெரு மானுக்கும் உண்டு. காமன் கருவேள். முருகன் செவ்வேள். காமனுடைய காரியம் எல்லாம் இருட்டில் நடைபெறும். முருகப்பெரு மான் வரும் இடங்கள் எல்லாம் ஒளி நிரம்பி இருக்கும். இருட்டுக்கும் திருட்டுக்கும் சொந்தம் உண்டு. ஆனால் முருகப் பெருமானுடைய திருவருளால் எங்கேயும் ஒளி, ஞானம் இவைகளே பரவி இருக்கும், பிறப்புக்குக் காரணமானது மாரனுடைய செயல். பிறப்பை நீக்கு வதற்குக் காரணமானது குமாரனுடைய திருவருள். எம்பெருமா னுடைய பேரழகுக்கு இன்னது என்ற எல்லை கிடையாது. 66 இப்போது அவனுடைய திருவடியைப் பார்த்துச் சூரபன்மன் சொன்னான்: இந்தப் பெருமானுடைய திருவடியின் அழகுக்கு ஆயிரம் கோடி காமர்களுடைய அழகு எல்லாம் திரண்டு வந்து நின்றாலும் ஒப்புமை யாகுமா?" என்று வியந்தான். ஆயிரம் கோடி காமர் அழகெலாம் திரண்டுஒன்று ஆகி மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணந் தன்னில் தூயநல் எழிலுக்கு ஆற்றது என்றிடின் இனைய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்? (தூரபன்மன் வதை. 489.)