சூரபன்மன் வதை 459 எம்பெருமானுடைய சரணத்தை, விமலமாம் சரணம்' என்று சொன்னான். மலம் இல்லாத திருவடி என்று பொருள் கொள்வதைவிட, தான் சென்று சேரும் இடங்களை எல்லாம் மலம் அற்றதாக ஆக்கும் திருவடி என்று சொல்வது பொருத்தம். அந்தப் பெருமானது சரணாரவிந்தத்தின் எழிலை, தூய நல் எழில்" என்று சொல்கிறான் சூரபன்மன். அழகில் தூய எழில், மாய எழில் என்று இரண்டு வகை உண்டு. மாய எழில் நம் உள்ளத்தில் விகாரத்தை உண்டாக்கும். தூய எழில் தூய்மையை உண்டாக்கும். பொதுவாக எழில் என்று சொன்னால் மங்கைமாரை நினைக்கிறோம். மங்கைமாரின் எழில் மயக்காமல் என்ன செய்யும்? மாமுனிவர் களையே மயக்கிவிடும்' என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் வேறோர் எழில் இருக்கிறது. நம் பக்கத்து வீட்டில் கொழு கொழு என்று ஒரு குழந்தை வளர்கிறது. அந்தக் குழந்தை வெளியில் வரும்போது, அதைக் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறோம். அப்படி முத்தமிடும் போது நம் உள்ளத்தில் விகார உணர்ச்சியா உண்டா கிறது? நாமே குழந்தை ஆகிவிடுகிறோம். மங்கையை முத்தமிடுவ தற்கும், குழந்தையை முத்தமிடுவதற்கும் வேறுபாடு நமக்குத் தெரிகிறது. குழந்தையை முத்தமிடுகிற போது விகாரம் இல்லை. நாமும் குழந்தையாகி விடுகிறோம். உலகக் குழந்தையே இப்படி என்றால் தெய்வக் குழந்தையாகிய முருகப் பெருமானின் அழகு நம் விகாரத்தைப் போக்கி நம்மை அருள் இன்பத்தில் ஆழ வைக்கும் என்பதில் என்ன தடை? "ஆயிரம் கோடி காமர்களுடைய அழகும் எம்பெருமானுடைய சரணத்திலுள்ள தூய எழிலுக்கு ஆற்றாது" என்று சூரன் சொன்னான். மன்மதன் அழகு மாய அழகு. உள்ளத்தை மயக்கும் அழகு அது. உள்ள மயக்கத்தை நீக்கும் அழகு எம்பெருமானுடைய அழகு. "இவன் திருவடி அழகே ஆயிரம் கோடி காமர்களுடைய அழகுக்கு சரியாகாது என்று சொன்னால் இவன் வடிவம் எல்லா வற்றுக்கும் எங்கே நான் உபமானம் காண்பேன்?" என்றான் சூரபன்மன். இனைய தொல்லோன் மாயிகு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்?
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/479
Appearance