462 கந்தவேள் கதையமுதம் ஏற்பட்டது. இங்கே சூரபன்மன் மெய்யடியான் ஆகிவிட்டான். ஆகவே, செவ்வேள் விமலமாம் சரணந் தன்னில் ஈடுபட்டுக் கண்டு சொக்கிப் போகிறான். பரிபாடலில் இறைவனுடைய திருவடியைப் பற்றி ஒரு பாட்டு வருகிறது. "உன்னைக் காட்டிலும் உன் திருவடிகள் எனக்குச் சிறந்தவை" என்று சொல்கிறார் புலவர். "நின்னிற் சிறந்தன நின் திருவடியவை PS என்பது பாட்டு. இது எப்படிப் பொருத்தமாக இருக்கலாம் என்ற கேள்வி எழும். ஆண்டவன் அங்கி; திருவடி அங்கம். ஆண்டவனை விட ஆண்டவன் திருவடி சிறப்பாகும் என்றால் அங்கியைவிட, அங்கம் சிறப்பானதா என்று தோன்றும். ஓர் உதாரணம் சொன்னால் நன்றாக விளங்கும். ஒரு வீட்டில் ஓர் ஏழை இருக்கிறான். அவனுக்கு ஒரு சின்னக் குழந்தை. அது அடிக்கடி அழும். அவனது பக்கத்து வீட்டில் பல மாடுகளை வைத்துக் கொண்டு பால் வியாபாரம் செய்கிறவன் இருக்கிறான். "ஏன் அந்தக் குழந்தை அழுகிறது?' என்று கேட்டபோது, அது பாலுக்காக அழுகிறது, அவன் நல்ல பாலாக வாங்கி அழும்போதெல்லாம் கொடுக்க எங்கே போவான்? வயிற்றுக்குப் பால் போதாமல் அழுகிறது" என்று சொல்லத் தெரிந்து கொண்டான். தனக்குக் குழத்தை பிறந்தால் இப்படி யெல்லாம் அழவிடக் கூடாது என்று எண்ணினான். சில காலத்துக் குப்பின் அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டுமென்று எண்ணினான். பல பசுக்களிடமிருந்து அண்டாவில் பால் கறந்தான். பத்துப் படிப் பால் உள்ள பாத்திரத்தை அப்படியே குழந்தை வாயில் சாய்ப்பானா? அண்டாவில் பால் இருந்தாலும், அதைக் குண்டாவில் எடுத்து வந்து, பாலோடையில் விட்டுக் குழந்தைக்குப் புகட்டுவான். அண்டா இருந்தாலும், குண்டா இருந்தாலும், பாலோடை இருந்தாலும் குழந்தைக்கு நேரே பயன் தருவது பாலோடையின் மூக்குத்தான். அது போல ஆண்டவனுடைய அடியவர்களுக்கு அணிமையிலிருந்து
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/482
Appearance