சூரபன்மன் வதை 463 நலம் தருவது அவனுடைய திருவடிதான். ஆண்டவன் வடிவம் மிகப் பெரியது. ஆனால் அவன் திருவடி நிலத்திற் பதிந்து அடியவர் களுக்கு அண்மையில் இருக்கும். அதைப் பற்றிக் கொண்டால் எல்லா வகையான இன்பமும் கிடைக்கும். தாய் ஆறடி உயரம். தவழ்ந்து வருகிற குழந்தை அன்னையின் கால்களைப் பற்றிக்கொண்டவுடன் அவள் அதைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்கிறாள். அப்படி, நாம் இறைவனது திருவடியைப் பற்றிக்கொண்டால் எல்லாவற்றுக்கும் மேலான உயர்ந்த இடத்திற்கு ஆண்டவன் நம்மை ஏற்றி விடுவான். ஆண்டவனுடைய பேரழகை அவனுடைய பக்தர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அழகான குழந்தையை யாவரும் பாராட்டு வார்கள். ஆனால் பகைவனாக இருக்கிறவன் பாராட்டினால் அந்த அழகு உண்மை யாகும். இங்கே பகைவனாக இருக்கிற சூரபன்மன் ஆண்டவன் அழகில் சொக்கிப்போய்ப் பாராட்டுகிறான். அருணகிரியார், மாலோன் முருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேலார் வயற்பொழிற் செங்கோ டனைச்சென்று கண்டுதொழ நாலா யிரம்கண் படைத்தில னே அந்த கான்முகனே " (கந்தர் அலங்காரம்) என்று பாடுகிறார். 'நாலாயிரம் கண் இல்லையே!' என்று கூறுவது முருகப் பெருமான் பல கண்களால் பார்ப்பதற்குரிய பேரழகன் என்பதைக் குறிப்பிக்கிறது. எல்லையிறந்த அழகு - இப்போது சூரபன்மன் இறைவனுடைய மேனி அழகு முழு வதையும் பார்த்தான். ஆண்டவனைப் பாட வேண்டுமானால் அடி முதல் முடிவரைக்கும் பாட வேண்டும். அதைப் பாதாதி கேசம் என்பார்கள். உண்மை அடியானாக அவன் எம்பெருமானின் திருவடி முதல் முடி வரைக்கும் கண்டு வியக்கிறான். 'பாதாதி கேசம் பார்த்தால் எத்தனை காலம் பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் என்னுடைய கண்ணால் பார்த்து அடங்காது போல் இருக்கிறதே. கண்ணைக் காட்டிலும் வேகமானது கருத்து. மனத்தினால் நினைக்கலாமோ
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/483
Appearance