உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரபன்மன் வதை 465 குடத்திற்குரியவனோ அந்தக் குடத்தை எடுக்க ஒன்பது தடவை மூழ்கினான். 'உடைமைக்கு ஒரு முழுக்கு, உடையவனுக்கு ஒன்பது முழுக்கு' என்பார்கள். அதுபோல நாம் பிறவிப் பெருங்கடலில் ஒரு முறை விழுந்து விட்டோம். நம்மைக் கரையேற்ற இறைவன் எத்தனையோ வடிவங்களை எடுத்துக் கொண்டு வருகிறான். அவன் நம்மிடத்திலுள்ள பரம கருணையினாலே என்ன என்னவோ உபாயம் செய்து நம்மைக் கரையேற்ற எண்ணுகிறான். இதைச் சூரபன்மன் நள்றாகத் தெரிந்துகொண்டு சொல்கிறான். "எம்பெருமான் என்னை ஆட்கொள்ள வேண்டுமென்று எண்ணினான். நான் அவன் இருக்கும் கோவிலுக்குப் போகமாட்டேன். அவன் இருக்கும் திசையை நோக்கமாட்டேன். என்னை அவன் இருக்கும் கோவிலுக்கு வா என்றால் நான் போவோ? கோவிலுக்குப் போகிறவர்களையும் தடுத்து நிறுத்துகிறவன் நான். ஆகவே, என்னை எப்படி ஆட்கொள்ள வேண்டுமென்று முருகன் பார்த்தான். என்னோடு போர் செய்வது என்று தீர்மானித்தான். "போருக்கு என்று சென்றால், அவன் மானம் தாங்காமல் போர் செய்ய வருவான். போர்க்களத்தையே நம் சந்நிதியாக்கலாம்" என்று திருவுள்ளம் கொண்டு, போர் செய்வானைப்போல வேலை எடுத்துக்கொண்டு என்னை ஆள வந்தான். தன் அழகு வலையை வீசி என்னை உருக்கி என்னை ஆட்கொள்ளவே வந்தான்' என்று எண்ணுகிறான். இங்கே ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். சாலையோரத்தில் இருக்கிற மாமரத்தில் ஒரு குரங்கு இருக்கிறது. அந்த மாமரத்தில் நிறையக் காய்கள் உள்ளன. அந்தப் பக்கமாகப் போகிற பையன் ஒருவனுக்கு மாங்காயைப் பார்த்தவுடன் நாக்கில் ஜலம் ஊறுகிறது. மரத்திலே குரங்கு இருப்பதைப் பார்க்கிறான். சாலையோரத்தில் இருந்த சிறு கல்லை எடுத்துக் குரங்கின் மேலே வீசுகிறான். மனிதன் செய்வது போலக் குரங்கும் செய்யுமல்லவா? மரத்தில் கல்லா இருக்கிறது? குரங்கு மரத்தில் இருந்த மாங்காயைப் பறித்து வீசுகிறது. அவனுக்கு மாங்காய் கிடைக்கிறது. அவன் செய்த தந்தி ரம் பலித்தது. அப்படி, சூரபன்மாவை ஆட்கொள்ள அவனோடு போர் செய்வதாக வந்தான் முருகன். சூரனும் முருகனுடன் போர் செய்ய வந்தான். வந்து தன் எழிலுருவத்தைக் காட்டி உருகச் செய்தான். 59