466 அவன் போர் செய்ய வந்தது என்னை அல்லவா?" என்று சூரன் சொல்கிறான். கந்தவேள் கதையமுதம் ஆட்கொள்வதற்கு என்பால் நண்ணினான் அமருக்கு என்கை அருள் என நாட்டலாமே என்கிறான். 'அருள் என நவிலலாமே' என்று கூடச் சொல்லவில்லை. நிச்சயமாகச் சொல்லலாம். துணிச்சலாகச் சொல்லலாம் என்ற பொருளில் நாட்டலாம்' என்று சொல்கிறான். . 'சண்டை போட வந்தவனை, அருள் செய்ய வந்தான் என்று எப்படிச் சொல்லலாம்?' என்று கேட்கலாம். இறைவன் இன்னபடி தான் அருள் செய்வான் என்று வரையறையாகச் சொல்ல முடியாது. சூரனுடன் செய்த போர் பார்ப்பதற்குப் போர் போல இருந்தாலும் அது தனியான அருளாகத்தான் முடிந்தது. ஒரு மிட்டாய்க் கடை : கோவாவினால் பச்சை மிளகாய், பாகற் காய், எலூரிச்சம்பழம் போல மிட்டாய்கள் பண்ணி வைத்திருக்கிறான். குழந்தை, "ஒரு பச்சை மிளகாய் கொடு; ஒரு பாகற்காய் கொடு" என்று காசு கொடுத்து வாங்குகிறது. பார்ப்பதற்குப் பச்சை வண்ணத்தோடு பச்சை மிளகாய் போலவே இருந்தாலும் அது உறைக்குமா? பாகற்காய் போல இருக்கும் மிட்டாய் கசக்குமா? எல்லாம் கோவாவினால் ஆனவை. பாகற்காயைத் தின்றாலும் இனிக்கும், பச்சை மிளகாயைத் தின்றாலும் இனிக்கும் என்பது குழந்தைக்குத் தெரியும். அதுபோல, முருகப் பெருமான் செய்வது போர் போலத் தோன்றினாலும் அது அருள்தான். அதைச் சூரன் தெரிந்து கொண்டான். சூரன் மெய்ப்பாடு அவனிடம் இருந்த கோபம் எல்லாம் போய்விட்டது. யுத்தம் செய்ய வேண்டுமென்றிருந்த ஊக்கம் போய்விட்டது. உடம் பெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது. கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் பெருகியது. முருகப் பெருமானிடம் முன்பு இல்லாத பேரன்பு பிறந்தது. அவன் உள்ளம் உருகியது. எலும்பெல்லாம் மெழுகு போலக் குழைந்தது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/486
Appearance