உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வயானை திருமணம் கண்டனள் மதலையைக் கருணை யால்தழீஇக் கொண்டனள், மகிழ்ந்தனள்; கொங்கை பாலுக விண்டளள் சுவற்சியை, வெறுமை யுற்றுளோர் பண்டுள பெருநிதி படைத்த பான்மைபோல். . 481 (தெய்வயானை.14. [விண்டனன் கவற்சியை -கவலைப்படுவதை விட்டாள். வெறுமை - வறுமை.] பெரும் நிதி ஒன்றை ஏழை பெற்றது போன்ற இன்பத்தை அவள் அடைந்தாள். அப்போது இந்திரன் முருகப் பெருமானிடத்தில் செய்ந்நன்றிக்கு அடையாளமாகத் தன்னுடைய மகள் தேவசேனை யைக் கல்யாணம் செய்து கொடுப்பதாகச் சொன்னான். கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை கட்டல் செய்தாய்; இந்நின்ற தேவர் சிறைமீட்டனை ; என்ற னக்கு முன்னின்ற தொல்சீர் புரிந்தாய் அது முற்றும் நாடிச் செய்ந்தன்றி யாகச் சிறியேன்செயத் தக்க துண்டோ ? தெய்வயானை. 17.) [கல் நின்ற மொய்ம்பின் -கல்போன்ற தோள்களை உடைய. அவுணக்கரை அசுரர்களாகிய கலையை, கட்டல் செய்தாய் - பிடுங்கினாய்.] என்று "முன்னாலே நான் வளர்த்து வந்த மங்கை இங்கே வந்திருக்கிறாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" சொன்னான். முந்தேதமி யேன்பெறு மங்கையிம் மொய்வ ரைக்கண் வந்தே அமர்வாள்; அவள்தன்னை வதுவை செய்து, கந்தே புரைநின் பெருந்தோளிற் கலத்தி ; யாங்கள் உய்ந்தே பிறவிப் பயன்பெற்றனம் ஓங்க என்றான். தெய்வயானை.I8.) [கந்தே புரை - தறியையொத்த.) இந்தப் பாட்டில் முருகப் பெருமானுடைய தோளை, "கந்தே புரை நின் பெருந்தோளில்" என்கிறான். கந்து என்பது யானையைக் கட்டும் தறி. தேவசேனையைத் தேவயானை என்றும் சொல்வார்கள். அந்த யானையைக் கட்டுவதற்குரிய தூணைப் போல இருக்கிறது ஆண்டவனின் திருத்தோள் என்ற குறிப்பும் இங்கே தெரிகிறது. தர்மம் என்னும் பயிர் உலகத்தில் வளர்ந்தால்தான் எங்கும் சுபிட்சம் உண்டாகும். அந்தப் பயிருக்குத் தடையாக ஏதேனும் வந்தால், தர்மம் குறைந்தால், மக்களுக்குத் துன்பம் உண்டாகும். 61