482 கந்தவேள் கதையமுதம் எப்படி உடம்புக்கு உணவு வேண்டுமோ அதுபோல் உயிருக்குத் தர்மம் வேண்டும். உணவை உண்டாக்குகின்ற பயிர்களுக்குத் தடையாகக் களை முளைத்தால் பயிர் பாழாகிவிடும். . உயிர்கள் மேலும் மேலும் இன்புற்று வாழவேண்டுமானால் தர்மம் என்னும் பயிர் தழைக்க வேண்டும். அந்தத் தர்மத்திற்குக் களையாக அசுரர்கள் முளைத்தார்கள். 'சூரபன்மனுடைய அண்டத்தில் எல்லாம் இருந்தன. ஆனால் தர்மம் இல்லை என்பதை முன்பே வீரவாகு சொன்னதைப் பார்த்தோம். தர்மம் என்ற பயிர் வளராமல் அவர்கள் தடுத்தார்கள். அசுரர்களாகிய களை வளர்ந்து வந்தது. அத்தகைய களையைப் போக்குவதற்குத் தேவர்களிடத்தில் தகுதியான ஆயுதங்கள் இல்லை. முருகப் பெருமான் ஞானசக்தியாகிய தன் வேலாயுதத்தைக் கொண்டு அறத்திற்குப் பகையாக உள்ள அசுரர்களாகிய களையை அழித்தான். அதனால் மீண்டும் தர்மம் வளரத் தொடங்கியது. தேவர்கள் பத்துப் பேர் சேர்ந்தாற்போல இருந்தால் அதைப் பார்க்கச் சூரன் மனம் சகிக்கவில்லை. அப்படிக் கூடினால் அவர் களைத் தண்டித்தான். தேவர்கள் நல்ல குணத்திற்கு அடையாளம். நல்ல குணங்களைச் சேரவொட்டாமல் செய்வன தீய குணங்கள். அசுரர்கள் தேவர்களைக் கூடாமல் பிரித்து வைத்தார்கள். இவை எல்லாம் நல்ல குணங்களைத் தீய குணங்கள் அழிக்கும் தன்மையைக் காட்டுகின்ற அடையாளங்கள். அசுரக் களைகளை ஆண்டவன் தன் வேலாகிற ஞானசக்தியினால் அழித்ததும், தேவ கணங்கள் தழைத்தன; நல்ல குணங்கள் தழைத்தன. அசுரர்களால் சிறைப்படுத்தப்பட்டிருந்த தேவர்கள் அதனி னின்றும் நீங்கினார்கள். இவற்றை எல்லாம் இந்திரன் நினைந்து பார்க்கிறான். முருகனிடம் அதனை வாயாரச் சொல்லுகிறான். கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை கட்டல் செய்தாய் இந்நின்ற தேவர் சிறைமீட்டனை. முதலில் அவுணர்களைக் களை எடுத்து, பிறகு தேவர்களைச் சிறை மீட்டான். யாருக்கேனும் நோய் வந்தால் முதலில் நோய் தீர மருந்து கொடுப்பார்கள். அதற்குப் பிறகு நோயினால் பலம்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/502
Appearance