உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வயானை திருமணம் 483 குன்றிய உடம்பு வலுப்பெற 'டானிக்' கொடுப்பார்கள். முதலில் துன்ப நீக்கமும் பின்பு இன்ப ஆக்கமும் உண்டாகும். முதலில் முருகன் அவுணர்களாகிய களையை எடுத்தான். பின்பு தேவர்களைச் சிறை மீட்டான். பழையபடி அவர்கள் தங்கள் தங்கள் பதவியைப் பெற்று வாழும்படி செய்தான். இவற்றை எல்லாம் எண்ணிப் பாராட்டுகிறான் இந்திரன். முருகப் பெருமான் செய்த எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து, அதற்குக் கைம்மாறாகி ஏதேனும் செய்ய முடியாதா என்று நினைக்கிறான். இறைவன் தன் கருணையினால் நமக்கு எத்தனையோ நலங்களைச் செய்து வருகிறான். தனு கரண புவன போகங்களைக் கொடுக்கிறான், அவனை நாம் வழிபடுவதன்றி, அவனுக்கு நாம் வேறு என்ன கைம்மாறு செய்ய முடியும்? உண்மையில் இறைவன் நம்மிடத்தில் எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. உலகத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக இருப்பவள் தாய். தாய் செய்கிற உதவிக்காவது கைம்மாறு செய்ய முடியுமா? பிற்காலத்தில் இவன் நம்மைக் காப்பாற்றுவான் என்று நினைந்து அவள் நம்மைக் காப்பாற்றுவது இல்லை. தன் உடம்பையே உருக்கி, தன் இரத்தத்தைப் பாலாக்கி ஊட்டுகிறாள். இந்த உலகத்திலுள்ள பெண்ணே கைம்மாறு கருதாது தன் குழந்தைக்கு அருள் பாலிக் கிறாள் என்றால் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கிற ஆண்டவன் நம்மிடம் கைம்மாற்றை எதிர்பார்த்தா செய்வான்? ஒரு பெண்மணி பன்னிரண்டு பவுனில் ஒரு சங்கிலி போட்டி ருந்தாள். பல ஆண்டுகள் கழித்து, வேறு ஒரு சங்கிலி போட்டுக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாள். பழைய சங்கிலியை அழித்து, புதுச் சங்கிலியைப் பண்ணச் சொன்னாள். பொற்கொல்லர் அந்தப் பழைய சங்கிலியை எடை போட்டுப் பார்த்தார். "முன்பு எவ்வளவு பவுன் இருந்தது?" என்று கேட்டார். அவள் பன்னிரண்டு பவுன் என்றாள். இப்போது அரைப்பவுன் சேதாரம்" என்று பொற்கொல்லர் சொன்னார். அழகை ஊட்டுவதாக, ஆபத்துக்குப் பயன்படுவதாக அந்த அம்மாளின் திருமேனியில் இருந்த சங்கிலி அது. அதனால் அந்த அம்மாளுக்குப் பயன் உண்டு.