484 கந்தவேள் கதையமுதம் ஆனால் அந்த அம்மாளால் அது எந்தப் பயனையும் பெறவில்லை. இந்த உவமையைப் பட்டினத்தார் சொல்கிறார். "பொன்னாற் பரயோசனம் பொன்படைத் தாற்குண்டு; பொன்படைத்தான் தன்னாற் ப்ரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டத் தன்மையைப்போல் உன்னாற் ப்ரயோசனம் வேணதெல் லாமுண் நினைப்பணியுங் என்னாற் ப்ரயோசன மேதுண்டு காளத்தி $1 யீச்சுரனே. முருகன் இசைதல் இந்திரன் செய்துகொண்ட விண்ணப்பத்தை முருகப் பெருமான் கேட்டான். அந்தப் பெண் முன்பே நம்மை நோக்கித் தவம் செய்தாள். ஆகையால் அவளை உன் விருப்பப்படி மணம் செய்து கொள்கிறேன் என்று பெருமான் சொன்னான். என்னும் துணையில் அமரேசனை எந்தை நோக்கி, அந்தங்கை தானும் மிகநோற்றனள், ஆத லால்நீ முன்னும் படியே மணம்தாளை முடித்தும் என்னத் தன்னும் கடத்த மகிழ்வெய்தித் தருக்கி நின்றன். - தெய்வயானை.19.) சன்னும்- (என்னும் துணையில் என்று சொன்ன அளவில்; என்றவுடன். தன்னையும்.] இவ்வாறு சொன்னதற்குக் காரணம் : இந்திரன் இப்போது மிகவும் பணிவுடன் பேசினாலும், பின்னாலே தருக்கு வந்தால், "நான் தானே என் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தேன் ?" என்று சொல் லக் கூடும் அல்லவா? அதனால், "முன்னாலேயே அவள் நோற்றாள் என்று முருகன் சொன்னான். பின்னர் முருகன் விசுவகர்மாவை நினைந்தான். அவன் வந்தவுடன் அங்கே ஒரு நகரமும், மண்டபமும் அமைக்க வேண்டுமென்று சொன்னான். அப்படியே விசுவகர்மா தன் மனத் தினால் நினைத்து அங்கே ஓர் அழகான கல்யாண மண்டபத்தை அமைத்துவிட்டான். முருகப் பெருமானுடைய திருமணத்திற்கு வரவேண்டுமென்று பலருக்கும் இந்திரன் திருமணவோலை அனுப்பினான்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/504
Appearance