உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வயானை திருமணம் 493 இந்த உடம்பு பொய்யான புலால் உடம்பு. பொய்யை மறைத்து மெய் என்ற பெயருடன் இருப்பது இந்த உடம்பு. குரங்கு முசுகுந்தனாகப் பிறத்தல் இறைவனுடைய திருவுள்ளப்படி அந்த முசுக்கலை அரிச்சந்திரன் குலத்தில் உதித்தது. குரங்கு முகத்தோடு பிறந்ததனால் முசுகுந்தன் என்ற பெயர் உண்டாயிற்று. முகம் தவிர மற்றப் பாகம் எல்லாம் மன்மதனைப் போன்ற அழகுடன் அமைந்தனவாக இருந்தன. மாமுக மேமுசு, மற்றுள எல்லாம் காமரின் ஏந்தரு காட்சிய வாகிக் கோமுறை சேர்முசு குந்தன் எனாவோர் நாம் இயற்பெயர் நண்ணிய தன்றே. (தெய்வயானை. 44.) [முசு - குரங்கு. காமரின் -மன்மதளைப் போல, ஏர்தரு - அழகைத் தரும். கோ முறை சேர் - அரசனுக்குரிய முறையைச் சேரும்.) முசுகுந்தன் சக்கரவர்த்தியாகி இந்த உலகத்தை எல்லாம் காப்பாற்றி வந்தான். ஆய வழிப்படும் அம்முசு குந்தன் தூய பொலன்முடி தொன்முறை சூடி மாயிரு ஞால வளாகம துள்ள தேய மெலாமொர் செகிற்கொடு காத்தான். (தெய்வயாளை.45. [ஞால வளாகம் - உலகப் பரப்பு. செகில் - தோள்.] தியாகராசாவைப் பெறுதல் முசுகுந்தனைப் பற்றி மற்றொரு வரலாறு உண்டு. திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். அப்படிப் படுத்திருக்கிற அவர் தம் மார்பில் சோமாஸ்கந்த மூர்த்தியை வைத்துப் பூஜித்து வந்தார். அப்போது ஹம்ஸ மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருந் தார். அது வாயினாலே சொல்லி ஜபிக்கும் மந்திரம் அல்ல. உஸ்வாச நிஸ்வாசத்துடன் சொல்வது. அதனால் அதற்கு அஜபா மந்திரம் என்று பெயர். ஹம்ஸ மந்திரம் என்றும் சொல்வார்கள். அப்படி அவர் அந்த மந்திரத்தை, முச்சை இழுத்தும் விட்டும் நினைக்கும்போது அவர் மார்பில் இருந்த சோமாஸ்கந்த மூர்த்தி