உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 மெல்ல அசைவார். கந்தவேள் கதையமுதம் அவர்தாம் தியாகராசா. அவர் அமர்ந்த கோலத்தில் ஆடினார். நடராசப் பெருமான் நின்றாடும் அழகர்; தியாகராசப் பெருமான் இருந்தாடும் அழகர். திருமால் அந்த மூர்த்தியை இந்திரனுக்கு வழங்கினார். இந்திரனுக்கு முசுகுந்தன் துணையாக வந்தான். ஆகவே முசுகுந்த சக்கிரவர்த்திக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று நினைத்து, உனக்கு என்ன வேண்டு மென்று கேட்டான். அப்போது முசுகுந்தன் இந்திரனிடம் இருந்த தியாகராசப் பெருமானைத் தரும்படி கேட்டான். இந்திரனுக்குத் தியாகராசாவைக் கொடுக்க மனம் வரவில்லை. ஆயினும் அதே மாதிரி வேறு ஓர் வடிவம் செய்து அதை முசுகுந்தனிடம் தந்தான். முசுகுந்தனுக்கு அது தெரிந்து, அதை வேண்டாம் என்று சொன்னான். மறுபடியும் மறுபடியும் அந்தத் தியாகராசாவைப் போலவே வேறு வடிவங்கள் செய்து முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்தான். இப்படியே ஆறு வடிவங்களை மறுத்தபின் இந்திரன் மூலமான தியாகராசாவை அவனுக்கே தந்து மற்ற ஆறு வடிவங்களையும் கொடுத்துவிட்டான்.

முசுகுந்தன் திருமணத்துக்கு வருதல் அத்தகைய தியாகராச பக்தனாகிய முசுகுந்த சக்கரவர்த்தி இப்போது தேவயானையின் திருமணத்திற்கு வந்து கொண்டிருந் தான். வேதபாரகர்களாகிய முனிவர்களும் தேவர்களும் முசுகுந்தன் வரும்போது அவன்மேல் மலர்மாரி சொரிந்தார்கள். அப்போது அந்த மலர்க் கூட்டங்கள் எல்லாம் முருகப் பெருமானைக் காண் பதற்கு நட்சத்திரக் கூட்டம் வந்ததுபோல இருந்ததாம். ஆரண முனிவர் தாமும் அமரரும் அகல்வான் செல்வார் சீரணி முக்குந் தன்மேல் திருமலர் சிதற லுற்ஞர், காரணமில்லா வள்ளல் கடிமணம் தாமும் காண்பான் தாரணி தன்னிற் செல்லும் தாரகா கணங்கொ லென்ன. (தெய்வயானை. 34.) (காரணம் இல்லா - தனக்கு மூலம் இல்லாத. தாரகாகணம் - நட்சத்திரக் கூட்டம்.] இறைவனுடைய சேனா ய கணங்களும், மற்றப் பக்தர்களும் மிகப்பெரும் கூட்டமாகத் திருப்பரங்குன்றத்தை வந்து அடைந்தார். கள். வெவ்வேறு தேசத்திலுள்ள மன்னர்கள் வந்து சேர்ந்தார்கள்,