உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வயானை திருமணம் 495 திருப்பரங்குன்றத்தில் அவரவர்களுக்கு என்று அமைத்திருந்த மண்ட பங்களில் போய்த் தங்கினார்கள். திருமண நிகழ்ச்சிகள் தேவமகளிர் தேவயானையிடம் வந்து அவளுக்குப் பல வகை யாக அலங்காரம் செய்தார்கள். சூரபன்மாவை அழித்து வெற்றி பெற்ற வீரப்படையை உடைய எம்பெருமானுக்கு நீ மனைவியாகப் போகிறாய். இந்த உலகத்திற்கு எல்லாம் நீதான் தலைவியாவாய் என்று அந்தப் பெருமாட்டியின் திருவடியைப் பணிந்து ஏத்தினார்கள். திருமண மண்டபத்திற்கு முருகப் பெருமான் எழுந்தருளி வந்தான். பிரமன் முதலிய தேவர்கள் வந்து அவனை வணங்கி வரவேற்றார்கள். இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அவன் மயில் மேல் ஏறி வந்தான். தேவர்களும் முனிவர்களும் அவனை வாழ்த்தி னார்கள். இந்திரனுடைய கட்டளையினால் அமைக்கப்பெற்ற மணி மண்டபத்தில் வந்து முருகன் அமர்ந்தான். அப்போது இந்திராணி எம்பெருமானை எதிர்கொண்டு பசுவின் பாலினால் முருகப் பெருமானு டைய பாதங்களை ஆட்டி வணங்கினாள். பாத பூஜை செய்தாள். விளக்குகள் ஏற்றி, மூன்று முறை வலமாக வந்தாள். இந்தக் காலத்திலும் திருமணத்தில் மாமியார் மாப்பிள்ளை காலைப் பாலால் அலம்புவதும், விளக்கை எடுத்துச் சுற்றுவதும் வழக்கமாக இருக் கின்றன. இவற்றை எல்லாம் எண்ணிக் கச்சியப்பர் முருகப் பெருமானின் திருமணத்தில் அத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தன என்று சொல்லியிருக்கிறார். எதிர்பு குந்திடும் இந்தி ராணிதன் புதிய தோர்யசுப் பொழிந்த தீயால் நிதியின் கொள்கலம் நிரப்பி வந்துவேள் கதயு கங்களில் பரிடுவா டாட்டினாள். தெய்வயானை.206.) (தீய பால் - இனிய பால். நிதியின் கொள்கலம்-பணம் வைத்திருக்கும் பாத்தி ரத்தில், நிதி - பொன்னும் ஆம். பதயுகங்களில் - இரண்டு திருவடிகளில்.] சிவனும் உமாதேவியும் வருதல் இப்படி இங்கே முருகப்பெருமானுக்குத் திருமணம் நடந்து கொண்டிருக்கிற தருணத்தில், அந்த மணத்தைக் காணவேண்டு