496 கந்தவேள் கதையமுதம் மென்ற ஆசையினால் பார்வதி பரமேசுவரர் விமானத்தில் வான்வழி யாக வந்தார்கள். ஆன காலை அரிஅயன் நாடுடாணா ஞான நாயகன் தங்கையும் தானுமோர் மான மேல்கொண்டு மாயிருஞ் சாரதர் சேனை சூழ்தரச் சேணிடைத் தோன்றினான். [மானம்-விமானம். சாரதர் - பூதகணம். (தெய்வயானை.213. சேணிடை வானத்தில்] திருமணத்திற்கு அம்மையும் அப்பனும் எழுந்தருளியது கண்டு மிக்க மகிழ்ச்சியை அடைந்த முருகவேள் உடனே தன் ஆசனத்தி லிருந்து எழுந்து இறங்கி வந்தான். அவர்களை ஒரு மணியாசனத்தில் அமர்த்தி வணங்கினான். அம்மை யுந்தன தத்தனும் வத்தது செம்மல் கண்டு சிறப்புடை ஓகையால் விம்மி தங்கொண்டு மேதகும் அன்பினால் இம்மெ னக்கடி தேஎழுந் தானரோ. அணைய காலையில் ஆதியம் பண்ணவன் இனிது மானத் திழிந்து கணத்துடன் புனித நீடு பொலன்மணிச் சாலையுள் வளிதை யாளொடும் வந்துபுக் கானரோ. (@gwair&. 214, 210.) (செம்மல் - முருகன். ஓகை மகிழ்ச்சி. விம்மிதம் - வியப்பு. விமானத்தினின்னும். மாளத்து முருகன் தன் முடி தாழ்த்தித் தாய் தந்தையர்களுடைய பாதார விந்தங்களை வணங்கினான். அப்போது அவனுடைய முடி சூரியனைப் போல இருந்ததாம். அம்மையப்பனுடைய பாதங்கள் கமலங்கள் போல இருந்தனவாம். அதுகண் டுநடந் தறுமா முகவன் எதிர்கொண் டுவிரைந் திருவோர் பதமும் முதிரன் பொடுதன் முடிசூ டினனால், கதிரும் கமலங் களும்மே வியபோல். (தெய்வயானை.317. அம்மைக்கும், அத்தனுக்கும் இரண்டு வகையான மகிழ்ச்சி இப்போது உண்டாயின. முருகன் சூரசங்காரம் செய்துவிட்டு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/516
Appearance