தெய்வயானை திருமணம் 497 வெற்றியுடன் வத்திருக்கிறான். அவனுடைய திரு அவதாரத்தின் பயனே அதுதான். அதனால் சினபெருமானுக்கு ஒருவகை மகிழ்ச்சி உண்டாயிற்று. அதுமாத்திரம் அல்லாமல் இப்போது தன்னுடைய தலைமைப் பீடத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தக்கபடி அவன் திரு மணம் செய்துகொள்கிறான் என்பது இரண்டாவது வகை மகிழ்ச்சி. சிவபெருமான் விமானத்திலிருந்து கீழே இறங்கினவுடன் முருகப் பெருமான் தானே போய் அம்மையப்பனை வணங்கினான் என்று கச்சியப்பர் சொல்கிறார். நல்ல பிள்ளை எப்படி நடப்பான் என்பதை இதன் மூலம் காட்டுகிறார். சிவபெருமானும் அம்பிகையும் தக்க இடத்தில் அமர்ந் தார்கள். அப்போது திருமணம் இந்திரன் தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தான். முனிவர்களும், தேவர்களும் அவளை வாழ்த்தினார்கள். உமாதேவி அவர்களை அழைத்துச் சென்று திருமணப் பீடிகையில் அமர்த்தி வைத்தாள். திருத்த குந்திறற் சேயையும் சேண்மிசை அருத்தி பெற்ற அணங்கையும் முற்படும் பெருத்த பொன்மணிப் பீடிகை மீரிசை இருத்தி வைத்தனள் யாவையும் ஈன்றுளாள். (@suwur. 236.) (சேயையும் - முருகளையும், சேண்மிசை வானத்தில், பீடிகை - பீடம்.] அப்போது இந்திரன் தன் மகள் தேவசேனையின் கரங்களைப் பற்றி முருகப் பெருமான் திருக்கரத்தில் கொடுத்து, " உன் அடியவ னாகிய யான் இவளை உனக்குக் கொடுத்தேன்" என்று கூறினான். அன்னுழி இந்திரன் ஆறுமு கேசன் தன்னொரு கையிடைத் தந்தியை நல்கி, நின்அடி யேன் இவண் நேர்ந்தனன் என்னாக் கன்னல் உ.. மிழ்ந்த கடிப்புனல் உய்த்தான். [அன்னுழி - அப்போது. நந்தியை - தேவயாளையை. தேன். கன்னன் - பாத்திரம்.] 63 தெய்வயானை.245.) நேர்ந்தனன்-கொடுத்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/517
Appearance