32 கந்தவேள் கதையமுதம் கேள்வியும், கற்பனையும் தோன்றுகின்றன. கச்சியப்ப சிவாசாரி யார் மலைமேலே மழை பொழிவதைப் பார்த்து, கண்ணப்பன் சிவ பெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டுவதைப் போல இருக்கிறது என்று சொல்கிறார். இது அவருடைய பக்திப் பெருக்கையே காட்டு கிறது. இப்படிப் பல அழகழகான உபமானங்களை எடுத்தாள்கிறார் கச்சியப்பு சிவாசாரியார். முக்கனி நாட்டுப் படலத்தில் மூன்றுவகைக் கனிகளைப் பற்றிய ஒரு பாட்டு வருகிறது. வாழை, மா, பலா ஆகிய மூன்றையும் முக்கனி என்று சொல்வது வழக்கம். இந்த மூன்று வகைக் கனிகளையும் உண்ணுகின்றவர்கள் வெவ்வேறு வகையில் செயல் படுவார்கள். வாழைப் பழத்தை மேலே உள்ள தோலை உரித்துவிட்டு உண்டுவிட லாம். மாம்பழத்தைக் காம்பையும், மூக்கையும் தறித்துவிட்டு, மேல் தோலையும் சீவி,உண்ணலாம்; கொட்டையை எறிந்துவிடலாம். பலாப்பழத்தை உண்ண வேண்டுமென்றால் முதலில் முள் நிறைந்த மேல் தோலைப் பீறி, உள்ளே இருக்கிற சடைகளை அகற்றி, பழத்தை காடுத்து, அதனுள் இருக்கிற கொட்டையை அகற்றிவிட்டுச் சுளையை உண்ணவேண்டும். வாழைப்பழத்தை உண்ணுவதைவிட மாம்பழத்தை உண்ணுவதில் முயற்சி கூடுதலாக இருக்கிறது. பலாப்பழம் இன்னும் அதிக வேலை வாங்குகிறது. மேலே உள்ளதை நீக்கி, உள்ளே இருக்கிற சக்கையை நீக்கி, சுளையை எடுத்துப் பிறகு கொட்டையை நீக்கிச் சாப்பிடவேண்டும். இப்படி மூன்று வகையில் பயன் தருகிற மூன்று பழங்களுக்கும் மூன்று வகையான வள்ளல் களை உவமை காட்டுகிறார் கச்சியப்ப சிவாசாரியார். ஒளவைப் பாட்டி ஒரு பாட்டுப் பாடுகிறாள். தண்டாமல் ஈவது காளாண்மை; தண்டி அடுத்தக்கால் ஈவது வண்மை ;-அடுத்தடுத்துப் பின்சென்றால் ஈவது காற்கூலி. ஒருவன் கேளாமல் கொடுப்பது உயர்ந்த கொடை கேட்டுக் கொடுப்பது இடைப்பட்ட கொடை அதை வண்மை என்று சொல்கிறார். அடுத்தடுத்துப் போய்க் கேட்டால் அப்போது கொடுப்பது கொடையாகாது; அடிக்கடி நடந்து சென்றதற்குக் கூலி;
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/52
Appearance