நாடும் தகரமும் 33 காற்கூலி. கேட்டவுடன் தருகிறவர் உத்தம வள்ளல். சில முறை கேட்டுத் தருகிறவர் மத்திம வள்ளல். பல காலம் கேட்டுத் தருகிறவர் அதம வள்ளல் என்று கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார். வாழைப் பழத்தை உத்தம வள்ளலுக்கும், மாம்பழத்தை மத்திம வள்ளலுக்கும். பலாப்பழத்தை அதம வள்ளலுக்கும் உவமையாகச் சொல்கிறார். சித்திரக் கதலிமா வருக்கைத் தீங்கனி துய்த்திட அரும்பயன் உதவும் தோற்றத்தால் உத்தமம் முதலிய குணத்தின் ஓங்கிய முத்திறத் தவர்கொடை மொழிய நின்றவே. (திருநாட்டும்.36) [கித்திரம்-அழகு, கதலி - வாழை, வருக்கை - பலா மொழிய - உவமையாகச் சொல்ல.] இவ்வாறு மூன்று பழங்களையும், மூன்று வகையான வள்ளல்களுக்கு ஒப்பிட்டுப் பாடுகிறார். இந்தப் பாட்டு ஆற்றுப் படலத்தை அடுத்த திருநாட்டுப் படலத்தில் வருகிறது. கந்தப் பெருமானுடைய வரலாற்றைச் சொல்ல வருகிறவர் அவனுக்கு உரிய நாடு இன்னது என்று எப்படி வரையறுப்பது? முருகன் எல்லா நாடுகளுக்கும் கடவுள் அல்லவா? குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட நகரில் வசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் அவனுடைய காவியத்தில் அவனது நாட்டையும், நகரத்தையும் பாடலாம். எல்லா உலகுக்கும் தலைவனாக இருக்கிற ஆண்ட வனுக்கு எந்த நாட்டைச் சொல்வது? எந்த நாரத்தைச் சொல்ல முடியும்? கச்சியப்ப சிவாசாரியாரோ தொண்டை மண்டலத்தை நாட்டுப்படலத்திலும், காஞ்சிபுரத்தைத் திருநகரப்படலத்திலும் பாடுகிறார். இது அவருடைய நாட்டுப் பக்தியைக் காட்டுகிறது. கந்தபுராணம் தோன்றிய இடம் காஞ்சிபுரம். தமிழ்க் கந்தபுராணம் பாடிய கச்சியப்பர் காஞ்சிபுரத்தினர் ஆதலால் அந்தப் புராணத்தில் நாட்டுப் படலத்தில் தொண்டை நாட்டையும், நகரப்படலத்தில் காஞ்சிமா நகரையும் பாடுகிறார். சேக்கிழார் திருத்தொண்டத் தொகை தோன்றிய நாட்டையும் நகரத்தையும் பெரிய புராணத்தில் சிறப்பித்துப் பாடுகிறார். கச்சியப்ப முனிவர் பாடிய விநாயக் புராணத்தில் அவர் பாடி அரங்கேற்றிய சென்னைமாநகரையும் தொண்டை நாட்டையும் சிறப்பித்துப் பாடுகிறார். 5
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/53
Appearance