508 கந்தவேள் கதையமுதம் உடையவனாக இருந்தான். அதைக் கண்ட மற்ற இருபத்தைந்து பெண்களுக்கும் வருத்தம் உண்டாயிற்று. ஆகவே அவர்கள் சந்திர னிடம் ஊடல் கொண்டு தம் தந்தையாகிய தக்கனிடத்தில் போய் முறையிட்டுக் கொண்டார்கள். அதைக் கேட்ட தக்கன் மிகவும் கோபம் கொண்டு சந்திரனுக்கு ஒரு சாபத்தைத் தந்தான். "உன்னு டைய கலைகள் எல்லாம் வரவரத் தேய்ந்து நீ அழிந்து போவாயாக!" என்று சாபம் இட்டான். போந்தனர் தக்கன் தன்பால், பொருமியே பொலம்பூண் கொங்கை ஏந்திழை மாதர் தங்கள் கேள்வளது இயற்கை கூறக் காந்திய உளத்த னாகிக் கனன்று அவன் கலைகள் எல்லாம் தேய்ந்துஇல வாசு என்று தீமொழிச் சாபம் செய்தான். (காந்திய - கோபம் கொண்டா] (சந்திர சாபம்.6.) அவன் இட்ட சாபத்தின் பயனாகச் சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாகக் குறைந்துகொண்டு வந்தது. ஒரே ஒரு கலை மாத்திரம் எஞ்சி இருந்தது. அப்போது சந்திரன் அந்தக் கலையும் தேய்ந்து விட்டால் நாம் அழிந்து போவோமே என்று அஞ்சி, யாரை அடைக் தால் நமக்கு நலம் உண்டாகும் என்று எண்ணிப் பார்த்தான். தக்க னுக்கு வந்த அதிகாரமும், ஆற்றலும் பரமேசுவரனுடைய கிருபை யினால் அல்லவா வந்தன என்று தெரிந்து கொண்டான். அவன் இறைவனிடம் சென்று முறையிட்டான். இறைவன் சந்திரனுக்கு அருள் புரிதல் உடனே தன்னிடம் வந்து அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பதையே தன்னுடைய கடமையாகக் கொன்ட பரமேசுவரன் அந்த ஒரே ஒரு கலையையுடைய சந்திரனை எடுத்துத் தன் முடியில் வைத்துக் கொண்டான். இறைவனுடைய திருமுடியில் சேர்ந்த பிறகு சந்திர னுடைய கலை தேயவில்லை. தக்கனுடைய சாபம் அந்த இடத்திற்குச் செல்ல முடியாது. தீர்ந்தன அன்றியே, திங்கள் தன்னிடை ஆர்ந்திடு கலையினை அங்கை யாற்கொளா வார்ந்திடு சடைமிசை வயங்கச் சேர்த்தினான்; சார்ந்திலது அவ்வழித் தக்கன் சாபமே. (சந்திர சாபம். 41.) [வயங்க விளங்க. Į
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/528
Appearance