உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்க யாக சங்காரம் 509 சந்திரன் ஒவ்வொரு கலையும் பௌர்ணமி வரைக்கும் வளர்ந்து முழுமையும் நிரம்பியவுடன் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்தான். ஆனால் ஒரு கலை அழியாமல் அப்படியே நின்றது. ஒன்று வைகலுக்கு ஓர்கலை யாய்நிறைந் தோங்கி தின்ற தொன்னிலை நிரம்பியே பின்உற நெறியே சென்று தேய்ந்துவந்து, ஒருகலை சிதைவுரூ தாகி என்றும் ஆவதும் அழிவதும் போன்றனன் இரவோன். சந்திர சாபம். 49.) (ஒன்று வைகலுக்கு - சேருகின்ற ஒவ்வொரு நாளுக்கும். இரவோன் -சந்திரன்.] சிவபெருமானுடைய கிருபையினால் வானத்திலுள்ள சந்திரனுக்குத் தேய்வும், வளர்ச்சியும் அமைந்தன. சிவபெருமானுடைய திரு முடியிலுள்ள சந்திரன் ஒரு கலையோடு இருந்தான். சந்திரன் அழிந்து போவான் என்று எண்ணிய தக்கன், அவன் கலைகளைப் பெற்று வளர்வதும், தேய்வதுமாக இருந்ததைக் கண்டு மிகவும் கோபம் கொண்டான். அப்போது புலகன் என்ற முனிவன் வந்து அவனைச் சமாதானப் படுத்தினான். "பதினாறு கலைகளில் ஒரு கலையைத்தானே சந்திரன் பெற்றிருக்கிறான்? முழுமையும் அவனுக்குத் தரவில்லையே! மாமனார் என்று உனக்கும் மரியாதை கொடுத்திருக்கிறான் அல்லவா?" என்று சமாதானம் சொன்னான். அதனால் தக்கன் சிறிது சினம் மாறினான். தாட்சாயணி திருமணம் அம்பிகை தன் பெண்ணாக வரவேண்டுமென்று வரம் கேட்டுப் பெற்றவன் ஆகையால் தக்கன் யமுனைக் கரையில் இருந்து தவம் செய்தான். அப்போது அம்பிகை சிறு குழந்தையாக வந்தாள். நமக்கு இறைவன் அருள் செய்தபடி இந்தக் குழந்தை வந்தது என்று எண்ணி எடுத்து வீட்டிற்குக் கொண்டுபோய் வளர்த்தான். அம்பிகை பெரியவளாகி வளர்ந்தாள். தட்சன் பெண்ணாக வந்த தனால் அம்பிகைக்குத் தாட்சாயணி என்ற பெயர் அமைந்தது. சிவபெருமானைக் கணவனாக அடைய வேண்டுமென்று தாட்சா யணி தவம் செய்யப் போனாள். அப்போது ஆண்டவன் அந்தணனாக எழுந்தருளினான்.பல விதமான சோதனைகளைச் செய்தான், "சாம்பல்