உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்க யாக் சங்காரம் 621 வீரபத்திரன் பிரமனைப் பார்த்து, அவன் தலையில் முருகப் பெருமான் குட்டியதுபோலக் குட்டினான். அவன் வீரபத்திரன் காலில் வழிபடுபவனைப்போலத் தலை வைத்து வீழ்ந்தான். கலைமகளு டைய மூக்கை வீரன் அரிந்து அனுப்பினான். வீட்டுமுன் வீழ்த லோடும், வீரருள் வீரத்து அண்ணல் மட்டுறு கமலப் போதில் வான்பெருத் தவிசில் வைகும் சிட்டனை நோக்கி அன்னான் சீரத்திடை உருமுற் றென்னக் குட்டினன், ஒருதன் கையால் மேல்வரும் குமர னேபோல். தாக்குத லோடும் ஐயன் சரணிடைப் பணிவான் போல் மேக்குறு சென்னி சோர விரிஞ்சனும் வீழ, அன்னான் வாக்குறு தேனி தன்னை மற்றவர் தம்மை வாளால் மூக்கொடு குயமும் கொய்தான்; இறுதிநாள் முதல்வன் போல்வாள். (யாகசங்காரப்,21,22.) + இடி (வீட்டுமுன் - திருமாலுக்குமுன். சிட்டன் - பிரமன். உரும் உற்றென்ன விழுந்தாற்போல், மேல் வரும் -இனி அவதரிக்கப் போகும். மேக்கு உறு மேலே உள்ள. வாக்குறு தேவி - காவிலுள்ள கலைமகள். ருயர் - தனம், முகல்வன்-பிரளயகால ருத்திரன்,) மற்றவர் - வேறு தேவமகளிர். சரசுவதிக்கு ஏன் தண்டனை கொடுத்தான் என்று தோன்றும். அவள் கலைமகள் ; கலைக்கெல்லாம் தலைவி; தன்னுடைய நாயகனுக்கு அறிவு ஊட்ட வேண்டியவள். உயர்ந்த அறிவுக் களஞ்சியமாகிய ய வேதமே அங்கே நிற்காமல் போனபோது, ஒரு புத்தகத்தைக் கையில் வைத்திருக்கிற சரசுவதி உடன் போகவேண்டாமா? ஆகவே, அவளுக்கும் தண்டனை கிடைத்தது. இங்கே ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. ஒட்டக்கூத்தர் கலைமகளின் அடியார். கூத்தனூர் என்ற ஊரில் அவர் வழிபட்ட சரசுவதிக்குக் கோவில் இருக்கிறது. அவர் தக்கயாக சங்காரத்தைப் பற்றி ஒரு தனி நூலே பாடினார். வீரபத்திரனுடைய வீர விளையாடல் 66