522 ய கந்தவேள் கதையமுதம் களைச் சொல்லியிருக்கிறார். அதற்குத் தக்கயாகப் பரணி என்று பெயர். வீரபத்திரன் தக்கனுடைய யாகத்திற்கு வந்தவர்களுக்குப் பல வகையான தண்டனை கொடுத்ததாக அங்கே சொல்கிறார். ஆனால் அதில் கலைமகளின் மூக்கை அரிந்ததாக மாத்திரம் சொல்லவில்லை. காரணம், ஒட்டக்கூத்தர் கலைமகளின் பக்தர். வீரபத்திரன் சந்திரனைக் காலால் தேய்த்தான். சூரியனது பல்லை உதிர்த்தான். பகன் என்னும் சூரியனுடைய கண்ணைப் பறித்தான். எமனது தலையை வெட்டினான். தப்பிக் கொள்வதற்கு இந்திரன் குயில் வடிவம் எடுத்து ஓடினான். அவனது சிறகை வெட்டினான். வேள்வியில் இருந்த அக்கினியின் கையையும், நாக்கையும் அறுத்தான். தக்கன் கழிந்ததற்கு இரங்குதல் இப்படித் தேவர்கள் எல்லாம் தண்டனை பெற்று நிலைகுலைந்து நிற்பதைத் தக்கன் பார்த்தான். அவனுக்கு உணர்வு சிறிது வந்தது. 'நமக்கு எத்தனையோ வளங்களை எல்லாம் தந்து இத்தகைய அதிகாரத்தை வழங்கிய எம்பெருமானை மனத்தில் நினைத்துப் போற்றவில்லையே ! செல்வச் செருக்கால் மயங்கிப் போய்விட்டேனே! தாட்சாயணியை மகளாகப் பெற்று, அவளை அவனுக்குக் கொடுத்த தனால் அவனை எனக்கு அடங்கிய மருகன் என்று எண்ணி அல்லவா ஏமாந்து போனேன்?* பெருவளம் நல்கிய பிரானைச் சிந்தையில் கருதுதல் செய்கிலன் ; கசிந்து போற்றிலன்; திருவிடை மயங்கினன் ; சிவையை நல்கியே மருகன்என்று அவளையான் மன்ற எள்ளினேன். (யாகசங்காரப். 41.) (திருவிடை - செல்வத்தினால். சிவை - அம்பிகை. மன்ற - மிகுதியாக.] "வேதங்களுக்கு முடிவாக ஆண்டவன் இருக்கிறான் என்று அறி யாமல் அவற்றை நிந்தித்தேனே ! இறப்பதற்கு ஏதுவான காரணங் களை எல்லாம் செய்துவிட்டேன். விதியின் வழியே என் புத்தி போய்விட்டதே' என்று மனத்தில் நினைந்து வருந்தினான்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/542
Appearance