உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்க யாக சங்காரம் துதிதரு மறைப்பொருள் துணிபு நாடியும் ததிமூடி அமலனை நன்று நித்தீயா இதுபொழுது இறப்பதற்கு ஏது ஆயினேன்; விதிவழி புந்தியும் மேர மேகொலாம். . 523 (யரகசங்காரம், 46.) [ துணிபு - துணிந்த உண்மை. நாடியும் - தெரிந்துங் கூட.] இப்போதுதான் அவன் எம்பெருமானைப் பற்றி நினைப்பதற்கு அறிவு உண்டாயிற்று. இங்கே ஒரு கருத்தை நாம் நினைக்க வேண்டும். ஆண்டவனை வணங்கினால் நமக்கு நன்மை உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். இந்தப் பிறவியைப் போக்கி மோட்சத்தை அடைவதற்கு அவன் திருத்தாளை வணங்கவேண்டு மென்று சிலர் சொல்கிறார்கள். இவற்றை எப்படி நம்புவது என்று நாம் கேட்கலாம். நன்றியறிவும் பக்தியும் இறைவனை வழிபட மற்றொரு காரணம் உண்டு. நாம் பெற்றிருக்கிற தறுகாண புவன போகங்கள் எல்லாம் அவன் தந்தவை. அவற்றை எல்லாம் பெற்றதனாலே நாம் வாழ்கிறோம். நம்மிடத்திலிருந்து எதையும் எதிர்பாராமல் இறைவன் நமக்கு அவற்றை எல்லாம் தந்திருக்கிருன். அதற்காகவே நாம் அவனை நன்றியறிவுடன் நினைக்க வேண்டும். இனிமேல் அவன் நமக்கு உபகாரம் செய்யப் போகிறான் என்ற நம்பிக்கையோடு அவனை வழி படுவது இருக்கட்டும். இதுவரைக்கும் அவன் நமக்குச் செய்தி ருக்கிற நன்மைகளை நினைந்தே நாம் வழிபட்டாகவேண்டும். நமக்கு அவன் எதையும் எதிர்பாராமல்,இத்துணை நன்மைகளைச் செய்திருக் கிறானே!' என்று எண்ணிப்பார்த்தால் அன்பு செய்யத் தோன்றும். 4 4 நமக்கு என்ன செய்துவிட்டான்? ஞானசம்பந்தப் பெரு மானைப் போல நமக்கு விசேஷமாக எதையாவது நல்கினானா?" என்று சிலர் எண்ணலாம். நமக்கு ஆண்டவன் தந்திருக்கிற நலன் களை எண்ணிப்பார்ப்பதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. வாய் பேசாத ஊமையை நாம் பார்க்கிறோம். நம்மை அவனைப்போல ஊமை ஆக்கிவிடாமல் பேசும் சக்தி கொடுத்தானே என்று நினைத்துப்