உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 கந்தவேள் கதையமுதம் கை பார்த்தால் அந்த அருமை தெரியும்; அவனை வாழ்த்துவோம். கால் இல்லாத முடத்தைப் பார்க்கிறோம். நம்மை நல்ல உறுதியான கை கால் உடையவனாக ஆக்கினானே என்று நினைந்தால் அப்போது இறைவனை நினைந்து உருகுவதற்கு வாய்ப்பு உண்டு. நம்மிலும் தாழ்ந்தவர்களை நோக்கி, 'நம்மை இந்த அளவுக்காவது உயர்ந்த நிலையில் இருக்கும்படியாக ஆண்டவன் செய்தானே!" என்று நன்றி அறிவோடு பார்க்கலாம். அற்புதங்கள் நிகழந்தால்தான்' அவனைப் பாராட்டலாம் என்று நினைக்க வேண்டுமென்பதில்லை. து வரைக்கும் நாம் பெற்ற நன்மைகளை, நாம் இருக்கும் நிலையினை எண்ணிப் பார்த்தாலே அவன் நமக்குச் செய்திருக்கும் உதவிகளை உணரலாம்.

இப்படி எண்ணிப் பார்க்கிற புத்தி தக்கனுக்கு இப்போதுதான் வந்தது. தனக்குப் பெரு வளம் வழங்கிய பிரான் என்று இறைவனை எண்ணிப் பார்க்கிறான். வேகத்தின் பொருளை எல்லாம் நான் தெரிந்திருக்கிறேன். அப்படித் தெரிந்திருந்தும் கட்ட இறைவ னுடைய பெருமையை நினைக்கவில்லையே! என்னுடைய அறிவானது விதியின் வழியே போய்விட்டதே!" என்று வருந்தினான். தக்கன் பெற்ற தண்டனை அப்போது வீரபத்திரன் கோபத்தோடு தக்கனை அணுகி, "தேவர்களின் துணை கொண்டு நீ எம்பெருமானை இகழ்ந்தாய். ஆகையால் உனக்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தன் வாளால் அவன் தலையை வெட்டினான். அந்தச் சென்னி கீழே விழுவதற்கு முன்னால் அதைக் கையினால் பற்றி அங்கே உள்ள வேள்விக் குண்டத்தில் இட்டு அக்கிளிக்கு இரையாக்கினான். ஒரு கணத்தில் அந்தத் தலை பஸ்மம் ஆகிவிட்டது. பத்திரகாளியின் செயல் அந்தச் சமயத்தில் பத்திரகாளி தக்கனுடைய மனைவி, மற்றும் அங்கிருந்த பெண்களாகியவர்களுடைய தலைகளை எல்லாம் சீவி அவற்றைக் கையில் பந்துபோல அடித்து விளையாடினாள். அந்த வேலையில், மறைக்கொடி தன்னைமுன் அணுகி முந்தி வார்குழை இறுத்தனள்; ஏனையர் முடியும் தந்த நங்கையர் சென்னியும், வாள்கொடு தடிந்து, கந்து கங்கள்போல் அடித்தனள் பத்திர காளி. (யாகசங்காரப். 58.} (மறைக்கொடி - தக்கன் மனைவியாகிய வேதவல்லி. குழை இறுத்தவன் - காதை அறுத்தாள் : குழை; ஆகுபெயர். கந்துகங்கள் - பந்துகள்.]