உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியம்மை திருமணம் மலரும் சுனியும் சூரசங்காரத்திற்காக முருகன் திரு அவதாரம் செய்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் கந்தபுராணம் சூரசங்காரத்துடன் முடியவில்லை. அதன் கடைசியில் வள்ளி திருமணம் இருக்கிறது. சூரசங்காரம் என்பது துன்பத்தை நீக்கும் செயல்; வள்ளி திருமணந்தான் இன்ப ஆக்கத்தைச் சொல்வது. கந்தபுராணம் என்னும் கற்பக மரத்தில் சூரசங்காரம் மலராக இருந்தால், அதன் கனி வள்ளியம்மை திருமணம். இறைவனுடைய திருவருளை அடைவதற்கு ஆன்மா முயற்சி செய்ய வேண்டும். அவனிடத்தில் பக்தி கொள்ளவேண்டும். இறைவன் மிக்க கருணை உடையவன், முருகப்பெருமானுடைய பெரும் கருணையைக் காட்டும் ஒரு செயல், சூரசங்காரம்; மற்றொன்று வள்ளிநாயகியின் திருமணம். முருகப்பெருமான் தன்னோடு போர் புரிய வந்தது அவன் அருளே என்று சூரன் முன்பு சொன்னதைப் பார்த்தோம். வள்ளியம்மையின் திருமணத்தில் முருகப்பெருமானின் மற்றொரு பேரருளின் சிறப்பைப் பார்க்கப் போகிறோம். நம்பி ராசன் தொண்டை நாட்டில் மேற்பாடி என்பது ஓர் ஊர். அது வள்ளிமலைக்கு அருகே உள்ளது. அது மிகவும் பழம்பதி என்று சொல்வார்கள். அயன்ப டைத்திடும் அண்டத்துக் காதியாய்ப் பயன்ப டைத்த பழம்பதி என்பரால், நயன்ப டைத்திடு நற்றொண்டை நாட்டினுள் வியன்ப டைத்து விளங்கும்மேற் பாடியே. (வள்ளியம்மை திருமணம். 2.) [நயன் - நீதி,வியன்படைத்து - விரிவை உடையதாகி.] வள்ளிமலை என்ற பெயர் வள்ளியம்பெருமாட்டி தோன்றியதால் உண்டாகி இருக்கலாம். அந்த மலையில் மிகுதியாக வள்ளிக் கிழங்கு உண்டானது என்பதனாலும் பிறந்திருக்கலாம். அதுவும் அதைச்