வள்ளியம்மை திருமணம் 633 சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம். குறிஞ்சியில் இருக்கும் ஊருக்குக் குறிச்சி என்று பெயர். மேற்பாடியும் ஒருவகைக் குறிச்சிதான். அந்தப் பகுதியை நம்பிராசன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் பல மைந்தர்களைப் பெற்றான். பல பிள்ளைகள் இருந்தாலும் ஒரு பெண் இல்லையே என்ற குறை அவனுக்கு இருந்தது. பெரும் பாலும் உலகத்தில் பெண்கள் பிறக்கும்; ஆண்கள் இல்லையே என்ற குறை இருக்கும். ஆனால் இங்கே அதற்கு மாறாக நம்பிராசன் ஆண் இருந்தும் பெண் இல்லையே என்று எண்ணினான். வள்ளி திருமணத்தில் இப்படியே உலகியலுக்கு வேறுபட்ட பல செய்திகள் வரும். தனக்கு ஒரு பெண்பிள்ளை இல்லையே என்று தன்னுடைய குலதெய்வமாகிய முருகப் பெருமானை நினைத்து முறையிட்டுக் கொண்டான் நம்பி ராசன். அவன் செய்த தவத்தின் பயனாக அவனுக்கு ஒரு பெண்ணை மூருகன் வழங்க எண்ணினான். ஆயதோர் குறிச்சி தன்னில் அமர்தரும் கிராதர்க் கெல்லாம் தாயக நுகம்பூண் டுள்ளான், நாமவேல் நம்பி என்போன்; மாயிருந் தவமுன் செய்தோன், மைத்தர்கள் சிலரைத் தந்து சேயிழை மகட்பேறு உன்னித் உ தெய்வதம் பராவி உற்றன். (குறிச்சி -குறிஞ்சிநிலத்து ஊர். கிராதர்-வேடர் (வள்ளியம்மை,18.) நாயக துகம் - தலைமைப் பொறுப்பு. நாம வேர் - பகைவர்களுக்கு அச்சத்தைத் தரும் வேல். சேயிழை மகட்பேறு - செம்பொள்ளுாலாகிய ஆபரணங்களை அணியும் மகள் பெறுவதை.] வள்ளியம்மை அவதரித்தல் அந்த மலைச்சாரலில் உள்ள காட்டில் சிவமுனிவர் என்னும் பெரியவர் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது திருமகள் அம்சமாகிய மான் ஒன்று அங்கே ஓடி வந்தது. சிவமுனிவர் திருமாலின் அம்சம். முனிவர் அந்த அழகிய மானைக் கண்டார். அதன் அழகில் அவருக்கு மயக்கம் உண்டாயிற்று. கண்ணால் அதை நன்றாகப் பார்த்தார். தவம் செய்பவர்கள் கண்ணால் பார்த்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/553
Appearance