534 கந்தவேள் கதையமுதம் தாலே அதற்கு மிக்க பயன் உண்டு. தவம் நிறைந்த சிவமுனிவர் பார்த்தவுடன் மான் வயிற்றில் கர்ப்பம் தோன்றியது. 'ரிஷி கர்ப்பம் இராத் தங்காது' என்பார்கள். அப்போதே கர்ப்பம் முதிர்ந்துவிட்டது. அந்த மான் வள்ளிக் கிழங்கை அகழ்ந்த குழி யில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. தான் ஈன்ற குழந்தையை மான் பார்த்தபோது, அது தன் இனம் போல இல்லாமல் வேறு இனம்போல இருந்ததால், அப்படியே அங்கு அதை விட்டுவிட்டு ஓடி விட்டது. அந்தக் குழந்தை குழியில் கிடந்து அழுதுகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வேட்டை ஆடுவதற்குக் காட்டுக்கு நம்பி ராசன் வந்தான். குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, அங்கே சென்று பார்த்தபோது, வள்ளிக்கிழங்கை அகழ்ந்த குழியில் ஒளி படைத்த ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டான். முருகப் பெருமானை எண்ணித் தவம் செய்ததன் பயனே இது என்பதை உணர்ந்தான். ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் பெண் குழந்தையினிடத்தில் ஆசை உண்டாகும். ஆகவே அந்தக் குழந் தையை எடுத்துச் சென்று, "இந்தா பெண் குழந்தை" என்று தன் மனைவியிடம் கொடுத்தான். } வந்தான் முதல்எடுத்த வள்ளிக் குழியில்வைகும் நந்தா விளக்கனைய நங்கை தனைநோக்கி, இந்தா இஃதோர் இனங்குழவி என்றெடுத்துச் சிந்தா குலம்தீரத் தேவிகையில் ஈந்தனனே. வன்னியம்மை. 35) [முதல் எடுத்த - கிழங்கைத் தோண்டிய, சிந்தாகுலம் - மனக்கவலை.] சேயிழை மகட்பேறு உன்னித் தெய்வதம் பராவி உற்றான் என்று முன்பு சொன்னார். அங்கே தாயின் குறையைச் சொல்ல வில்லை. இங்கே அதை நன்றாகத் தெரிவிக்கிறார். தனக்குப் பெண் குழந்தை இல்லையே என்ற எண்ணம் தாய்க்கு இருந்து வருத்தியது. அந்தக் கவலை தீரும்படியாக அவள் கையில் அந்தப் பெண் குழந்தையை நம்பி ராசன் கொடுத்தானும். பெண்களுக்கு ஆண் குழந்தைகள் எத்தனை இருந்தாலும் ஒரு பெண் குழந்தையாவது வேண்டுமென்று இருக்கும். அதற்குக் காரணம் உண்டு. வயது வந்த ஆண்பிள்ளைகள் தாய் பக்கத்தில்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/554
Appearance