பம்மை திருமணம் 841 மறுபடியும் பேசுகிறான், சொல்லும்போது உன்னுடைய நாக்குக்கும், உதட்டுக்கும் துன்பம் உண்டாகும். ஆகவே அந்தக் கஷ்டம் உனக்கு வேண்டாம். சிறிதே புன்னகை காட்டமாட்டாயா? அதற்குக் கூடச் சிறிது முயற்சி வேண்டுமென்று எண்ணுவாயோ ? அப்படியானால் உன்னுடைய கண்ணினால் ஒரு பார்வை பார், போதும். விரகத்தினால் மிகவும் துன்புறுகிற எனக்கு ஏதேனும் ஒரு வழியைக் காட்டு. நான் எத்தனையோ சொன்னேனே ! இவற்றில் ஒன்றுகூட நீ செய்யக் கூடாதா? நான் உய்வதற்கு எந்த வழியையும் காட்டாமல், உன்னு டைய மனம் எனக்கு உருகாமல் இருந்தால்,நான் ஏதாவது செய்து கொள்வேன். அதனால் பழி உன்னை வந்து சூழும். ஆகவே என்னைப் புறக்கணிக்காதே: பராமுகமாக இருக்காதே" என்று மீண்டும் அவன் தளர்ந்து பேசுகிறான். " உன் ஊர், பேர் முதலியவற்றைச் . மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின், விழிஒன்று நோக்காய் ஆயின், விரசும்மிக்கு உழல்வேன் உங்யும் வழிஒன்று காட்டாய் ஆயின், பழியொன்று நின்யால் சூழும்: B மனமும்சுற்று உருகாய் ஆயின், பராமுகூம் தவிர்தி ஏன்ருன். ஆறுமுகன் ஆடல் (வள்ளியம்மை. 72.) இங்கே, முருகப்பெருமான் இப்படிக் கெஞ்சிக் கூத்தாடி கிற்கிறானே ; இது நியாயம் ஆகுமா? என்ற ஐயம் தோன்றும். வள்ளி நாயகியைத் தடுத்து ஆட்கொள்வதற்காக முருகப் பெருமான் வந்திருக்கிறான்; அவளைச் சோதனைபோட்டு, அவளுடைய உள்ளத் திலுள்ள அன்பை நன்கு அறிந்து, அநுக்கிரகம் பண்ண வேண்டு மென்று வந்திருக்கிறான். என்றாலும் இப்படி ஒரு பெண்ணின் முன்னே பல்லைக் காட்டிப் பரிதவிக்கலாமா?' என்று கேட்கத் தோன்றும். இது அவன் செய்த நாடகம். இந்த இடத்தில் கச்சியப்ப சிவாசாரியார் ஒரு விளக்கம் சொல்கிறார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/561
Appearance