உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 கந்தவேள் கதையமுதம் ஒரு சிற்றூரில் காலையில் நல்ல மழை பெய்தது. மழை நின்ற வுடன் அங்கங்கே தண்ணீர் வடிந்துவிட்டது. என்றாலும், ஒரு தெருவின் ஓரத்தில் இருந்த சிறிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. அன்று பௌர்ணமி. மாலையில் சந்திரன் தோன்றினான். மாலை நேரத்தில் நல்ல துலாம்பரமாக இருந்த சமயம். குழந்தைகள் எல்லாம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு பையன் தெரு ஓரத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் சந்திரனுடைய முழு வடிவம் தெரிவதைக் கண்டான். ஒரு சிறு கல்லை எடுத்து அந்தத் தண்ணீரில் போட்டான். அதில் தெரிந்த சந்திர பிம்பம் ஆயிரம் சுக்கலாக உடைந்தாற்போலத் தோற்றம் அளித்தது. அளித்தது. அவன், "சந்திரனை உடைத்துவிட்டேன், உடைத்துவிட்டேன்!" என்று கூவினான். உண்மையில் சந்திரனை உடைத்தானா? தண்ணீரில் கண்ட பிரதி பிம்பம் உடைந்தாற்போலத் தோன்றியதேயன்றி, வானத்தில் இருந்த சந்திரன் எந்த விதமான கலக்கமும் அடையாமல் இருந்தான். அதுபோல, எம்பெருமான் இங்கே கலக்கம் அடைந்தானைப் போலக் காட்டுவது வெறும் தோற்றம்; வள்ளிநாயகிக்கு அருள் செய்வதற்காகச் செய்த நாடகம் என்று விளக்கம் தருகிறார் கச்சியப்ப சிவாசாரியார். உலைப்படு மெழுக தென்ன உருகியே ஒருத்தி காதல் வலைப்படு கின்றன் போல வருந்தியே இரங்கா திள்றன்; கலைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலில் தோன்றி அலைப்படு தன்மைத் தன்றே அறுமுகன் ஆடல் எல்லாம்? (வள்ளியம்மை.73.) (கலைப்படு மதியப்புத்தேன் - கிரணங்களை உடைய சந்திரன்.] முருகன் உவகை வள்ளிநாயகியிடம் முருகப்பெருமான் கெஞ்சுகின்ற கோலத் தைப் பக்தர்கள் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்வார்கள். வள்ளி நாயகியிடம் முருகப்பெருமான் ஆடிய திருவிளையாடலை முருகன் அடியார்கள் வெவ்வேறு வகையில் எடுத்துரைப்பார்கள். வள்ளி நாயகி வேடர் வேடத்துடன் வந்த முருகப்பெருமானைக் கோபித்துக் கொண்டு,"ஏடா, வேடா, போடா,மூடா!" என்றாள். அதனைக் கேட்ட முருகப்பெருமானுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. "நம்முடன் பேசி விட்டாளே ! " என்ற மகிழ்ச்சிதான்.