உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியம்மை திருமணம் 843 என்றான். ஒரு பையன், என்னோடு கவர்னர் பேசினார் கவர்னர் எப்படிப் பேசினார்?" என்று கேட்டான் மற்றொருவன். நான் நடுரோடில் போய்க் கொண்டிருந்தேன். கவர்னர் கார் வந்தது.. சட்டென்று கார் நின்றது. அட முட்டாளே! சாலை ஓரமாகப் போ' என்று சொன்னார்" என்றான் அந்தப் பையன். ' அதுபோல வள்ளிநாயகியினுடைய கோபமான வார்த்தைகள் முருகப்பெருமானுக்கு இனித்தன. அருணகிரிநாதப் பெருமாள் இதனைக் குறிப்பாக ஒரு பாட்டில் சொல்கிறார். மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்" (சுந்தர் அலங்காரம்) என்று பாடுகிறார். தமிழினிடத்தில் முருகப்பெருமானுக்கு உள்ள காதலைச் சொல்கிற பாடல் இது. வாழ்த்துவாரை வாழவைப்பது என்பது எல்லோருக்கும் இயல்பு. ஆனால் முருகப்பெருமானோ மூன்று தமிழிலும் வைதாரையும் வாழவைப்பவன் என்கிறார். எப்படி என்று கேட்கலாம். அதற்கு ஒரு காரணம் முதலில் சொல்கிறார். முருகன் முதல் முதலாக வேடக்கோலத்தோடு சென்ற போது வள்ளிநாயகி வரவேற்கவில்லை; புகழவில்லை. அவள் வாயிலிருந்து கோபமான சொற்களே, வசவுச் சொற்களே வந்தன. அவை எம் பெருமானுக்கு இனித்தன. வள்ளியின் வாயிலிருந்து முதல் முத லாகக் கேட்ட வார்த்தைகள் அவை. ஆகையால் அவை இன்பம் தீந்தன. ஒரு பெண் நன்றாகப் பாடுவாள். திருப்புகழ் பாடினால் மிகவும் அற்புதமாக இருக்கும். கச்சேரியும் செய்வாள். அவளைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஒரு கட்டிளங்காளை வந்து அவளைப் பார்த் தான். அப்போது, "விறல்மாறன் ஐந்து" என்ற திருப்புகழை அவள் பாடினாள். அவன் மிகவும் மகிழ்ந்து திருமணத்திற்குச் சம்மதம் கொடுத்தான். திருமணம் ஆயிற்று. திருமணத்திற்குப் பிறகு அவள் தொடர்ந்து கச்சேரி செய்து வந்தாள். டில்லியில் அவள் கச்சேரி நடந்தது. ராஷ்டிரபதி தலைமை வகித்து, பதக்கம் கொடுத்து, பொன்னாடை போர்த்தினார். தச்சேரி முடிந்து அவர்கள் தங்கும் இடத்துக்கு வந்தார்கள்.