உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 கந்தவேள் கதைபமுதம் அந்தப் பெண் தன் கணவனிடம், "இன்றைக்கு எப்படி இருந்தது என்னுடைய பாட்டு ?" என்று கேட்டாள். "பாட்டு அமுதம் போல இருந்தது; ராஷ்டிரபதியே பாராட்டியிருக்கிறார். உன் பெருமையை நான் சொல்ல வேண்டுமா?" என்றான். " . "ராஷ்டிரபதி பாராட்டினாலும் என் பதி மகிழவேண்டாமா?" என்றாள், கொஞ்சலாக. " மிகவும் அற்புதமாகத்தான் இருந்தது. என்றாலும் நான் முதல் முதலாக உன்னைப் பெண் பார்க்க வந்த போது, 'விறல் மாரனைந்து' என்ற திருப்புகழைப் பாடினாயே; அதற்குச் சமானம் ஆகாது" என்று சொன்னான். காரணம், முதல் முதலாக உணர்ச்சியை உண்டாக்கிய அதுவே அவனுக்குச் சிறந்த தாகத் தோன்றுகிறது. . அதுபோல முருகன் வள்ளிநாயகியிடம் முதல் முதலாக அவன் சொன்ன வசவுகளைக் கேட்டான். யாரேனும் தமிழில் வைதால் உடனே அவனுக்கு அந்த நினைவு வந்துவிடுகிறது. இப்படித்தானே முதல் முதலாக வள்ளி நம்மோடு பேசினாள்?' என்ற எண்ணம் தோன்ற உள்ளம் கிளுகிளுக்கிறது. அனுக்கிரகம் உடனே பண்ணுகிறான். இந்தக் கருத்தை வைத்துத்தான், "மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன்,முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப் போன், வெய்ய வாரணம்போல் கைதான் இருப துடையான் தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே" & என்று பாடுகிறார், அருணகிரியார். மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன்; அதனால் முத்தமிழால் வைதாரையும் வாழவைப்போன்' என்று குறிப்பாகத் தோன்றும்படி சொல்கிறார். கண்ணபிரான் ராதையிடம் கெஞ்சியதாக அஷ்டபதியில் வருகிறது. அவள் திருவடியில் வீழ்ந்து அவன் கெஞ்சினான் என்றும் வருகிறது. அப்படியேதான் முருகப்பெருமான் வள்ளிநாயகியின் திருவடியில் வீழ்ந்தான் என்று அருணகிரியார் சொல்வார். நாதர குமரா நமவென் றரனார் ஓதாய் என்ஓ தியதெப் பொருள்தான்? வேதா முதல்விண் ணவர்சூ டுமலர்ப் பாதா குறியின் பதசே கரனே ! (சுந்தர் அநுபூதி)