வள்ளியம்மை திருமணம் 645 பிரமன் முதலிய தேவாதி தேவர்களின் தலைகள் எல்லாம் உன் காலில் இருக்க,உன் தலை வள்ளிநாயகியின் காலில் இருக் கிறது' என்று சொல்கிறார். இந்தப் பாட்டில், "குறமின் பத சேகரனே' என்ற தொடரில் அந்தப் பொருள் இருக்கிறது. திருப்புகழில் குறமகளாகிய வள்ளியின் பாதத்தை அவன் வருடி னான் என்பார் அருணகிரியார். பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா 33 . முத்துகுமாரசுவாமி பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் மிக அழகிய பாட்டு ஒன்றைச் சொல்கிறார். "மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி வில்லியார் இளவலோடும் விதிமுறை வணங்கச் சடாயுபுரியிற்கருணை வெள்ளமென வீற்றிருக்கும் ஆனே றுயர்த்திட்ட ஐயர்க்கும் அம்மைக்கும் அருமருந் தாகிநின்ற ஆதிப்பிரான்என்று மும்முதற் கடவுளும் அடித்தொழும் பாற்ற, மற்றக் கூனேறு மதிநுதல் கெய்வக்குறப்பெண் குறிப்பறிந் தருகணைந்துன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக் குறையிரந் தவள் தொண்டை டவாய்த் தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன் செங்கீரை ஆடியருளே! செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள், செங்கீரை ஆடியருளே 33 என்பது அந்தப் பாட்டு."குறவர் மகட்குச் சலாமிடற்கு ஏக்கறு குமரன் " என்று வேறோர் இடத்தில் பாடுவார். கெஞ்சலாமா? 'வள்ளிநாயகியிடம் தன்னுடைய கோலத்தை வெளிப்படை யாகக் காட்டி அநுக்கிரகம் பண்ணினால் என்ன ?' என்ற கேள்வி எழும். குறிஞ்சி நில மக்கள் எப்போதும் முருகனிடத்தில் அன்பு உடையவர்கள். வள்ளிநாயகி முருகனிடத்தில் அன்பு உடையவளாக 69
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/566
Appearance