646 கந்தவேள் கதையமுதம் இருந்தாள். அந்த அன்பைச் சோதிக்கவே முருகன் இவ்வாறு வேடம் போட்டு வந்தான். அவள் சற்றும் இளகவில்லை. இந்த உறுதியைத் தெரிந்து மகிழ்ச்சி அடைந்தான். அவளிடம் அவன் கெஞ்சி, பல்லைக் காட்டி நின்றாலும் அதுவும் ஒருவகை அருள்தான். அவன் சூரனோடு போர் செய்தது அவ னுடைய அருளின் விளைவு என்பதைக் கண்டோம். அது போல இங்கே மிகவும் முதிர்ந்த காதலுடையவனாகக் கெஞ்சிப் பேசிய தும் அவனுடைய திருவருளைக் காட்டும் அடையாள மென்றே கொள்ளவேண்டும். ஒரு வீட்டின் வாயிலில் பிச்சைக்காரி ஒருத்தி, "அம்மா! ஒரு பிடி" என்று சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். அதேசமயத்தில் உள்ளே,"அம்மா! ஒரு பிடி " என்ற குரல் கேட்கிறது. வெளியில் பிச்சைக்காரி எழுப்புகிற குரலைப்போலவே உள்ளே இருந்து வருவ தால் உள்ளேயும் ஒரு பிச்சைக்காரி இருந்து பிச்சை கேட்கிறாளோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் உள்ளே இருப்பவள் யார், தெரியுமா? தாய், தன் குழந்தைக்குச் சோறு ஊட்டுகிறாள். "அம்மா. ஒரு பிடி" என்று கெஞ்சிக் கெஞ்சி ஒவ்வொரு பிடியாக ஊட்டுகிறாள். வெளியிலே கேட்ட ஒலி இரப்பவள் ஓலி உள்ளே கேட்பது இடுபவள் ஒலி. ஆகவே, புறத்தோற்றத்தைக் கண்டு நாம் தீர்மானம் பண்ணக் கூடாது. உள்ளே புகுந்து தாயின் அன்பைத் தெரிந்து கொண்டால், அன்பு உடையவர்கள் கெஞ்சியும் ஊடுவார்கள் என்பதைக் தெரிந்துகொள்ளலாம். இங்கே, பேரருளாளனாகிய ஆண்டவன், கெஞ்சி வள்ளிநாயகிக்குத் தன் அருளைக் கொடுக்க வேண்டுமென்று வந்தான். இந்தச் செயல் ஆண்டவனின் பேரருட் செயல் என்பதை அந்தப் பெருமானுடைய திருவருளைப் பெற்ற அருணகிரிநாதர் சொல்கிறார். "எம்பெருமானே, என்னுடைய மனமாகிய மனமாகிய கல் மிகவும் செறிவாக இருக்கிறது; பிறவிதோறும் படர்ந்த வாசனையினால் அடர்ந்து இறுகிக் கிடக்கிறது. உன்னுடைய திருத்தாளாகிய தாமரை இந்தக் கல்லில் மலருமா தாமரை தண்ணீரில்தானே அலரும்? மனம் உருகி, அன்பு நீர் நிறைந்தால், அப்போது அங்கே உன்னுடைய திருவடித் தாமரை அவரும். ஆனால் ?
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/567
Appearance