உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியம்மை திருமணம் 549 இன் துணையாய் இவண் எய்தியது' என்று நம்பிராசன் சொல் கிறான். 'உனக்கு ஏற்ற பாதுகாப்பாக இது நிற்கிறது' என்று மேலாகப் பொருள் தோன்றும். ஆனால், 'இவளுக்கு இன்துணைவ னாக இவன் வந்திருக்கிறான்' என்ற குறிப்பும் இதன் உள்ளே இருக்கிறது.பின்னாலே நடக்கிறவற்றை முன்னாலே பேசுகின்றவர் களுடைய வாக்கில் அவர்கள் அறியாமலேயே வைத்துச் சொல்வது பெரிய காப்பியங்களில் ஒரு மரபு. அதைத் தொனி என்பார்கள். அத்தகைய இடங்கள் பல உண்டு. மீட்டும் முருகன் கோலம் மாறுதல் நம்பிராசனும் வேடர்களும் தம்முடைய ஊருக்குச் சென்று விட்டார்கள். மறுபடியும் முருகப்பெருமான் தன்னுடைய பழைய வேடக் கோலத்தை எடுத்துக்கொண்டு நின்றான். மீண்டும் வள்ளிநாயகியைப் பார்த்துக் கெஞ்சத் தொடங்கினான்.நான் இங்கே மனிதனாக நிற்பதனால் என்னை ஏற்றுக்கொள்ளாமல் நீ இருக்கிறாய். நீ ஆடுகின்ற சுனையாக நான் இருந்திருந்தால் உன்னைத் தீண்டும் இன்பம் எனக்குக் கிடைத்திருக்கும். நீ அணிகின்ற சந்தனமாக இருந்தால் உன் திருமேனி முழுவதையும் அளைவேன். நீ தலையில் சூடுகின்ற மலர்களாகப் பிறந்திருந்தால் உன்னோடு எப்போதும் இருப்பேனே !" என்று சொல்லிச் சொல்லித் தன் வாட்டத்தை வெளிப்படுத்தினான். "இனி நான் என்ன செய்யட்டும் ?" என்று கேட்டான் முருகன். கோடிவர் நெடுவரைக் குறவர் மாதுநீ ஆடிய சுளையதாய், அணியும் சாந்தமாய்ச் சூடிய மலர்களாய்த் தோயப் பெற்றிலேன்; வாடினன் ; இனிச்செயும் வண்ணம் யாவதே ? (வள்ளியம்மை.87.) [கோடு இவர் - சிகரங்கள் பொருந்திய. சாந்தம் - சந்தனம்.] வள்ளிநாயகி முன்னாலே வேடனைக் கண்டவுடன் கோபம் கொண்டாள். இப்போது கோபம் கொள்ளவில்லை. வேங்கையாக நின்று மறுபடியும் வேடனாக வந்தவுடன், 'இவன் சாதாரண வேடன் அல்லன் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவள் உள்ளத்தில் அவளையறியாமலே கொஞ்சம் அன்பு முளைத்திருக்க வேண்டும். இவன் ஏனைய வேடர்களைப் போன்றவன் அல்லன்' என்ற