உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 கந்தவேள் கதையமுதம் உணர்வும் ஏற்பட்டிருக்க வேண்டும். மரமாகி, மீண்டும் வேடனானது கண்டு, இவனிடம் தெய்வத்தன்மை இருக்கிறதென்று எண்ணி யிருக்க வேண்டும். இல்லையானால் மறுபடியும் அவனை வைத்திருப்பாள் அல்லவா? இருவரும் உரையாடல் "நீ என்னை ஏற்றுக்கொண்டால் நல்ல தேவப் பெண்கள் எல்லாம் உனக்கு ஏவல் செய்வார்கள் னான். அவற்றை எல்லாம் திலே போராட்டம் நிகழ்ந்தது. கேட்ட என்று ஆண்டவன் சொன் வள்ளிகாயகியின் உள்ளத் "சுவாமி, தேவப் பெண்கள் ஏவல் செய்வார்கள் என்று சொன்னீர்கள். அதனால் நீங்கள் பெரிய அரசர், பெரிய நிலையில் உள்ளவர் என்று தெரிகிறது. நானோ மிகவும் இழிந்த குலமாகிய வேட்டுவச் சாதியில் பிறந்தவள். உலகத்திற்கு எல்லாம் அருள்பாலிக்கின்ற முதல்வராகத் தோன்றுகிற நீங்கள் என்னை அணைப்பதற்கு இப்படி மிகவும் இழிந்த வார்த்தைகளைச் சொல்லுதல் உங்களுக்குப் பழி அல்லவா ? உங்கள் நிலைக்கு இது ஏற்குமா?" என்று சொன்னாள். இழிகுலம் ஆகிய எயினர் பாவைநான்; முழுதுல கருள்புரி முதல்வர் நீர் ; எனைத் தழுவுதல் உன்னியே தாழ்ச்சி செப்புதல் பழியது வேயலால் பான்மைத் தாகுமோ? (வள்ளியம்மை.90.) [எயினர் பாவை - வேடர் பெண். தாழ்ச்சி - தாழ்வான வார்த்தையை.] இங்கே வேடர் குலத்தை இழிகுலம் என்கிறாள். அதற்கு விளக்கம் போல அருணகிரியார், என்பார். "கொலையேபுரி வேடர் குலப்பிடிதோய் மலையே வேடர்கள் வீட்டில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தால் ஆயிரம் மானை அடித்துக் கொன்று விருந்து வைப்பார்கள். அவர்கள் வீரம் காட்ட வேண்டுமானால் அப்போதும் மிருகங்களைக் கொல்வார்கள். விளையாட்டிலும் வினையாட்டிலும் அவர்கள் செய்வது கொலைதான். ஆகவே, கொலையே புரி வேடர்' என்று சொன்னார்.