உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியம்மை திருமணம் 561 கொலை செய்வது எல்லாவற்றிலும் இழிந்தது ஆகையால் 'இழிகுலம்" என்று வள்ளிநாயகி சொன்னாள். முருகன் கிழக்கோலம் பூணுதல் . இப்படி மறுபடியும் இருவரும் உரையாடிக்கொண்டிருந்த சம யத்தில் மீண்டும் வேடர்குலத் தலைவன் தன் படையுடன் அங்கே வந்தான். வேடனாக வந்த முருகனிடம் இயல்பாக வள்ளி கோபம் கொண்டிருந்தால், தன் தந்தை வருவதைக் கண்டவுடன் அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகியிருக்க வேண்டும் நல்ல வேளையாக நமக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது. அவர்களிடம் சொல்லி இவனைத் தண்டிக்க வேண்டும்' என்ற எண்ணம் தோன்றும் ஆனால் இப்பொழுதோ அவர்கள் வந்ததைக் கண்டு அவள் நெஞ்சம் நடுங்கியது. என்றிவை பலப்பலவும் ஏந்திழை இயம்பா நின்றபொழு தத்தில்அவள் நெஞ்சம்வெருக் கொள்ள வென்றிகெழு தொண்டகம் வியன்துடி இயம்பக் குன்றிறைவள் வேட்டுவர் குழாத்தினொடும் வந்தான். (வள்ளியம்மை. 92.1 தொண்டகம் - குறிஞ்சிநிலப்பறை. [வெருக்கொள் - அச்சமடைய. உடுக்கை. குன்றிறைவன் -நம்பிராசன்.] துடி. காப்பியத்தில் பாத்திரங்களை வருணிக்கிறவர்கள் அவர்கள் மனத்திலே உண்டாகும் மாறுதல்களைக் குறிப்பாகப் புலப்படும்படி சொல்வார்கள். மனம் மாறினதால் இப்படிச் செய்தார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ஆனால், நுட்பமாக அமையும் செயல்களும், கூற்றுக்களும் பாத்திரங்களின் மனமாற்றத் தைக் தெரிவிக்கும். வள்ளி நாயதியின் உள்ளம் மெல்ல மெல்ல முருகனிடத்தில் ஈடுபட்டதை அவளுடைய செயல்களின் மூலமாகக் கச்சியப்பர் காட்டுகிறார். வேடர்கள் வருவதைக் கண்டவுடன் வள்ளிநாயகிக்கு நடுக்கம் உண்டாயிற்று. என்ன செய்வது என்று தெரியவில்லை.உடனே முருகனைப் பார்த்து, "இதோ வருகிற வேடர்கள் மிகவும் பொல்லாத வர்கள்; கொடுமையானவர்கள். நீங்கள் இங்கே இருப்பதைப்