652 கந்தவேள் கதையமுதம் பார்த்தால் உங்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடும். ஆகையால் தயை செய்து உடனே நீங்கள் உயிர்பிழைக்கும்படியாக ஓடுங்கள் என்று தெரிவித்தாள். அவனிடத்தில் கோபம் இருக்குமானால் கோபம் இருக்குமானால் " வருகிறவர்களைப் அப்படி பார்த்து, 'சீக்கிரம் வாருங்கள்" என்று சொல்வாள். இல்லாமல் வருகிறவர்களைக் கண்டு நடுங்கி, "நீங்கள் சீக்கிரம் ஓடுங்கள் என்று சொன்னாள். இந்தப் பாட்டில் அவள் மனத்தில் தோன்றுகிற மாற்றம் குறிப்பாகப் புலனாகிறது. வத்தபடி கண்டுமட மான்நடு நடுங்கிச் சிந்தைவெரு விக்கடவுள் செய்யமுகம் நோக்கி வெந்திறல்கொள் வேடுவர்கள் வெய்யர்;இவண் நில்லாது உய்த்திட நினைத்துகடிது ஓடும் இனி என்றாள். (வெருவி -பயந்து. வெய்யர் -கொடியவர்.] 21 (வள்ளியம்மை.93.) அவளுடைய பேச்சினூடே இருக்கிற மாற்றத்தை இறைவன் தெரிந்துகொண்டான். நீ ஓடு" என்று அவள் சொன்ன வார்த் தையில் அவள் கோபம் தெரியவில்லை. 'நம்மிடத்திலுள்ள அன்பினால் இப்படிச் சொல்கிறாள். கமக்குத் தீங்கு நேரக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறது' என்று உணர்ந்து கொண்டான். ஆகவே அவனுக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. அப்போது ஒரு கிழவன் வேடத்தை ஏற்றுக்கொண்டு அங்கு வந்திருக்கிற வேடர்களிடையே போனான். ஓடுமின் என்றவள் உரைத்தமொழி கேளா நீடுமகிழ் வெய்திஅவண் நின்றகும ரேசன் நாடுபுகழ் சைவநெறி நற்றவ விருத்த வேடமது கொண்டுவரும் வேடர்எதிர் சென்றான். (விருந்த வேடம் -கிழக் கோலம்.] முதியவன் கூறுதல் (வள்ளியம்மை. 94. நம்பி ராசன் அவனைக் கண்டு, யார் என்று கேட்டான். அப்போது கிழக்கோலத்திலுள்ள முருகப் பெருமான், "வீரம் மிக்க நெடுங்காலமாக எனக்குக் கிழத்தனம் இருக்கிறது. மனத்தில் கொஞ்சம் மயக்கம் இருக்கிறது. இந்த இரண்டும் அரசனே,
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/573
Appearance