உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 கந்தவேள் கதையமுதம் உற்றனள், அவளுக்கு எந்தை ஒருதனித் துணைய தாகி மற்றிவண் இருத்திர் என்ன, அழகிதாம் மன்ன என்றான். (வள்ளியம்மை, 08.) (நிற்றலும்: நித்தலும் என்பது எதுகை நோக்கி விகாரமாயிற்று. மற்று : அசை.] தன்னுடைய மகளுக்குத் தக்க பாதுகாப்பு இருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு நம்பி ராசன் மீண்டு சென்றான். முதியவன் செயல் வேடர்கள் போன பிறகு முதியவன் பார்த்து, +6 வள்ளிநாயகியைப் எனக்கு மிகவும் பசியாய் இருக்கிறது; செய்வேன்!* என்று சொன்னான். என்ன அப்போது வள்ளிநாயகி தேனும்,பழமும், தினைமாவும் முருக னுடைய கையில் கொடுத்தாள். அவற்றை ஏற்றுக்கொண்டு உண்ட முருகன், "மிகவும் வெப்பமாய் இருக்கிறது; தாகத்திற்குத் தண்ணீர் வேண்டும்" என்று கேட்டான். வள்ளிநாயகி உணவுப் பொருளைக் கையில் கொடுத்தபோது அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். அதற்குமேல் அவன், "எனக்கு விடாய் உண்டாயிற்று" என்று சொல்லவே, வள்ளிநாயகி, "சுவாமி, ஏழு மலைகளுக்கு அப்பாலே ஒரு சுனை இருக்கிறது. அங்கே சென்று நீர் உண்டு வாருங்கள்" என்றாள். கிழவனாக வந்த முருகன், "பெண்ணே, என்னைப் பார்த்தால் ஏழு மலை நடந்து செல்லக் கூடியவனாகத் தெரிகிறதா? எனக்கு அந்தத் தீர்த்தம் எங்கே இருக்கிறது என்றே தெரியாதே! நீயும் துணையாக வந்தால் நன்றாக இருக்கும்" என்றான். தன்னை அறியா மலே முதியவனிடத்தில் அன்பு வள்ளிநாயகியின் அடிமனத்தில் தோன்றியிருக்கிறது. ஆகவே அவனுடன் சென்றாள். சுனையைக் காட்டினாள். அங்கே முருகப் பெருமான் நீரைக் குடித்தான். அதற்கு மேல் அவன் பேச ஆரம்பித்தான். பெண்ணே, நீ எனக்குத் துன்பத்தைத் தருகிற பசியைத் தீர்த்தாய். அதற்குமேல் எனக்கு உண்டான தாகத்தையும் தீர்த்தாய்.