வள்ளியம்மை திருமணம் 555 இந்தப் பசியும் தாகமும் போனாலும்,இன்னும் என்னுடைய தளர்ச்சி போகவில்லையே! அந்தத் தளர்ச்சி என்ன என்று கேட்கிறாயா? என்னுடைய உள்ளத்தில் மோகம் எழும்பியிருக்கிறது. அதை நீ தணித்துவிட்டால் எனக்குள்ள குறை போய்விடும்" என்றான். ஆகத்தை வருத்து கின்ற அரும்பசி அவித்தாய்; தெண்ணீர்த் தாகத்தை ஆவித்தாய்; இன்னும் தவிர்ந்தில தளர்ச்சி மன்னோ; மேகத்தை அனைய கூந்தல் மெல்லியல், வினையேன் கொண்ட மோகத்தைத் தணித்தி யாயின் முடிந்ததுவன் குறையது என்றாள். (வள்ளியம்மை. 104. (ஆகத்தை -உடம்பை. அவித்தாய்-நீக்கினாய்.) மோகம் என்னும் வெப்பத்தினால் வருந்திய முருகப் பெருமான் அந்த வெப்பம் தீர்வதற்கு மேகத்தின் நிழலைக் கேட்பவனைப்போல் "மேகத்தை அனைய கூந்தல்" என்று சொல்கிறான். "கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ வெய்தாம்அக் காம விடாய்" என்று தளவெண்பாவில் வருகிறது. வள்ளி சினந்து கூறுதல் அந்த வார்த்தையைக் கேட்டபோது வள்ளிக்குக் கோபம் மிகுதி யாயிற்று. "உம்மைப் பார்த்தால் கிழவரைப் போல இருக்கிறீர். உம்முடைய கேசம் எல்லாம் நரைத்துப் பூத்திருக்கிறது. ஆனால் உமக்கு நல்லறிவு சற்றும் இல்லையே! முதுமையினால் வரவேண்டிய அறிவு உமக்கு உண்டாகவில்லை. இழிந்த குலத்தில் பிறந்த என்னை விரும்பிப் பித்துப் பிடித்தவரைப்போலப் பேசுகின்றீர். வேடர் குலத் திற்குக் கொடும் பழியை உண்டாக்கி விட்டீரே !* என்றாள். நத்துப் புரைமுடியீர், நல்லறிவு சற்றும்இலீர்! எத்துக்கு மூத்தீர்? இழிகுலத்தேன் தன்னைவெஃகிப் பித்துக்கொண் டார்போல், பிதற்றுவீர்; இவ்வேடர் கொத்துக்கெ லாம்ஓர் கொடும்பழியைச் செய்தீரே. (adraftwumu. 108.) (நத்துப்புரை முடியிர் - சங்கைப்போல வெளுத்த தேசத்தை உடையவரே. எத்துக்கு - எதற்கு. வெஃகி - விரும்பி.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/576
Appearance