உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 கந்தவேள் கதையமுதம் தேவயானையைக் கற்புக் காதல் மூலமாக ஏற்றுக்கொண்டான். அதனால்தான் தேவயானையை, 66 மறுவில் கற்பின் வான்நுதல்" என்று அவளைத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடு கிறார். மறுவில் வாள் நுதல், கற்பின் வாள் நுதல் என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். அவள் கற்புமணப் பிராட்டி. இந்த இரண்டு வகையான காதலைப்பற்றியும் பரிபாடலில் ஒரு பாட்டு வருகிறது. திருப்பரங்குன்றத்தில் தேவயானையின் கட்சியைச் சேர்ந்த பெண்களும் மற்றவர்களும், வள்ளிநாயகியைச் சேர்ந்த பெண்களும் மற்றவர்களும் காதலிலே மோதுகிறார்கள். மாலையோடு மாலையை மோதி அடிக்கிறார்கள். மயிலோடு மயிலை மோத விடு கிறார்கள். தேவயானையின் கட்சியைச் சேர்ந்த மகளிரைப் பார்த்து, வள்ளியைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்: "உங்களுக்கு வேதம் தெரியும். தமிழிலுள்ள களவு மணம் தெரியுமா? களவுக் காதல் எல்லாவற்றையும்விடச் சிறந்தது; அந்த முறைப்படி முருகன் எங்கள் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டான்" என்று சொல் கிறார்கள். அத்தகைய களவுக் காதலை முருகப் பெருமான் வள்ளியிடம் நிகழ்த்தினான். கச்சியப்ப முனிவர் என்னும் புலவர் திருத்தணிகைப் புராணத்தைப் பாடியிருக்கிறார். அங்கே வள்ளிநாயகிக்கும், குமார நாயகனுக்கும் இடையில் நிகழ்ந்த காதலை வருணித்து அகத்துறைகள் எல்லாவற்றையும் வைத்துப் பாடியிருக்கிறார். வள்ளிநாயகியை முருகன் அழைத்துச் செல்லுதல் சில காலம் இப்படிக் களவுக் காதல் நடந்தது. வேங்கை மரம் பூத்தது. அப்போது தினைக்கதிர் முற்றிவிட்டது. அதற்குமேல் அதை அரியத்தான் வேண்டும் காவல் அவசியம் இல்லை. ஆகவே, குறவாணர்கள் வள்ளிநாயகியை வீட்டில் தங்கும்படி செய்து விட்டார்கள். அதை இற்செறித்தல் என்று சொல்வார்கள். வழக்கம் போலத் தினைப்புனம் வந்த முருகன் அங்கே வள்ளி இல்லா ததைக் கண்டான்,