வள்ளியம்மை திருமணம் 563 அவளைத் தேடி இரவில் வள்ளியின் வீட்டிற்கே சென்றான். வள்ளிநாயகியின் தோழி வள்ளியை அழைத்துக்கொண்டுவந்து அவனைச் சந்திக்கவிட்டாள். அதற்கு இரவுக் குறி என்று பெயர். தினைப்புனத்தில் நடக்கும் களவுக் காதலைப் பகற்குறி என்று சொல்வார்கள். இரவுக் குறியிலும் வள்ளிநாயகி முருகப் பெருமானைச் சந்தித்துக் காதல் செய்தாள். முருகப் பெருமான் வராத காலம் மிகுதியாக இருந்ததால் வள்ளிநாயகிக்குச் சோர்வு உண்டாயிற்று. வீட்டில் உள்ளவர்கள் அதைக் கண்டு தெய்வம் தீண்டிவிட்டது என்று பூசாரியை அழைத்துப் பூஜை போடச் சொன்னார்கள். அப்போது தோழி குறிப்பாக, வள்ளிநாயகி ஒரு காதலனைப் பெற்றிருக்கிறாள் என்று சொல்ல, அதனை வீட்டில் உள்ள தாய்மார்கள் கவனிக்க வில்லை. தோழி உடனே முருகனிடம், வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்கும் எண்ணம் குறவாணருக்கு இல்லை என்பதைப் புலப்படுத்தினாள். பிறகு இரவோடு இரவாக வள்ளிநாயகியை முருகனோடு அனுப்பிவிட்டாள். அப்படி அனுப்புவதை உடன் போக்கு என்று சொல்வார்கள். முருகப் பெருமான் வள்ளிநாயகியோடு அந்த இருளில் சென்று, அந்த ஊரை விட்டுவிட்டு, பசுமரம் நிறைந்த சோலையை அடைந்தான். விடைபெற்றே இகுளை ஏசு, வேலுடைக் கடவுள் அன்ன நடைபெற்ற மடந்தை யோடு நள்ளிரு ளிடையே சென்று கடைபெற்ற சீறூர் நீங்கிக் காப்பெலாம் கடந்து காமன் படைபெற்றுக் குலவும் ஆங்கோர் பசுமரக் காவுட் சேர்ந்தான். (வள்ளியம்மை.189.) (இகுளை - தோழி, மடந்தை - வள்ளி நாயகி. கடைபெற்ற - வாயிலை உடைய. சீறூர் - மேற்பாடி. காமன் படை - மலர்கள். கா - சோலை.) வேடர்கள் படையுடன் வந்து துஞ்சுதல் மறுநாள் காலை மகளைக் காணாத தாயும் மற்றவர்களும் அவளைத் தேடினார்கள். வேடர்கள் வள்ளியைத் தேடிப் போனார்கள். பல் இடங்களிலும் தேடிக் காணாமல் பிறகு முருகனோடு வள்ளி இருந்த
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/584
Appearance