உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 கந்தவேள் கதையமுதம் . சோலைக்குள் அவர்கள் நுழைந்தபோது, அவர்களைக் கண்டு வள்ளி "வேலா அச்சம் அடைந்தாள். அதைக் கண்ட முருகப் பெருமான், யுதம் என் கையில் இருக்கிறது; நீ அஞ்சாதே" என்று சொன்னான். அப்போது வேடர்கள் வந்து எதிர்க்கவே. வள்ளிநாயகி,"இவர்களை உங்களுடைய வேலால் அழித்துவிட வேண்டும்" என்று வேண்டி னாள். முருகப் பெருமான் தன் கையில் இருந்த சேவல் கொடியைப் பார்த்தான். அது மிமிர்ந்து எழுந்து கூவியது. அந்தக் குரலைக் கேட்ட வேடர்கள் யாவரும் அப்படியே இறந்து கீழே விழுந்து விட்டார்கள். என்றிவை குமரி செப்ப எம்பிரான் அருளால், பாங்கர் நின்றதோர் கொடி.மாண் சேவல் திமிர்ந்தெழுந்து, ஆர்ப்புக் கொள்ளக் குன்றவர் முதல்வன் தானும் குமாரும் தமரும் யாரும் பொன்றின ராகி மாண்டு பொள்ளெனப் புவியில் வீழ்ந்தார். (வள்ளியம்மை.184.) [குமரி -வள்ளி நாயகி. பாங்கர் - பக்கத்தில். கொடிமாண் சேவல் - கொடியி லுள்ள பெருமை பெற்ற சேவல். ஆர்ப்புக் கொள்ள ஆரவாரம் செய்ய ; தமரும் - சுற்றத்தாரும். பொன்றினர் - இறந்தவர்.] 4 வேடர்கள் உயிர் பெற்று எழுதல் கூ. அப்போது நாரத பகவான் அங்கே வந்தார். "சுவாமி, உன்னு டைய மாமனாரும், பிற உறவினரும் இப்படி இறந்துவிடலாமா? உனக்குப் பெண்ணை வழங்கினதற்கு இதுதானா அவர்கள் பெறும் பரிசு? 'இது உனக்கு அருள் ஆகுமா?" என்று கேட்க, உடனே முருகப் பெருமான் அவர்களை எழுப்ப எண்ணினான். பெற்றிடு தந்தை தன்னைப் பிறவுள சுற்றத் தோரச் செற்றமொடு அட்டு நீக்கிச் சிறந்தநல் அருள்செய் யாமல் பொற்றெடி தன்னைக் கொண்டு போந்திடத் தகுமோ என்னா மற்றிவை முனிவன் கூற வள்ளலும் ஆஃதாம் என்றான். (வள்ளியம்மை. 187. [செற்றமொடு அட்டு - கோபத்தோடு கொன்று. பொற்றொடி - வள்ளி. மற்று அது சரியாகும்.]