உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியம்மை திருமணம் 571 பருவம் வந்தவுடன் உணர்ந்து, அவ்வாறு விளையாடுவதை நிறுத்தி, தனக்கென்று ஒரு தலைவன் வரவேண்டு மென்று எண்ணுவாள். நமக்கும் பக்குவம் உண்டானால் ஆண்டவனை அடைய வேண்டுமென்ற ஆசை உண்டாகும். இப்படி ஆன்மாக்கள் யாவும் பெண் என்பதை அறிந்தால், வள்ளி திருமணம் என்பது இறைவனோடு நாம் ஒன்று படுகிற திருமணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். முருகன் திருக்கோலம் கந்தகிரியில் முருகப் பெருமான் வள்ளி, தேவசேனை சமேதனாக எழுந்தருளியிருக்கிறான். வள்ளி நாயகி வலப்பக்கத்திலும், தேவ சேனை இடப்பக்கத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு கையில் வேல் இருக்கிறது. நாம் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு மூன்று நிலைகள் உண்டு. செய்ய வேண்டுமென்ற விருப்பம் முதலில் தோன்றுகிறது. அதை எப்படிச் செய்ய வேண்டுமென்று ஆராய்ச்சி பண்ணிச் செய்வதற்குரிய அறிவு வேண்டியிருக்கிறது. பின்பு செயலைச் செய்கிறோம். விரும்புவது இச்சா சக்தி. அறிவு பெறுவது ஞான சக்தி. செயல் செய்வது கிரியா சக்தி. இந்த மூன்றும் நம்மிடம் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட எல்லைக்குள் அவை அடங்கி யிருக்கின்றன. பரமாத்மாவாகிய ஆண்டவனிடத்தில் அகண்டமான சக்திகள் இருக்கின்றன. உலகம் எல்லாம் அருள்பெற்று உய்ய வேண்டுமென்று அவன் விரும்புகிறான். அதுவே அவனுடைய அது ஞான இச்சா சக்தி. அவன் எல்லாம் அறிந்த சர்வக்ஞன். சக்தி. அவன் அகடிதகடனா சாமர்த்தியம் உள்ளவன். நினைத்த மாத்திரத்தில் எல்லாம் செய்ய வல்லவன். அதுதான் கிரியா சக்தி. இந்த மூன்று சக்திகளும் இறைவனிடம் இருப்பதைக் காட்டு கின்ற அடையாளங்களே வள்ளி முதலியவர்கள். வள்ளிநாயகி இச்சா சக்தி. எம்பெருமான் உள்ளத்தில் ஆசை தோன்றி, அவளை மணந்துகொள்ள வேண்டுமென்று முயன்றான். அது அவன் விருப்பத்தைக் காட்டுகிறது. ஆகவே வள்ளி நாயகி, இச்சா சக்தி. ஆண்டவன் செய்த போர் பெரிய காரியம். தமிழில் வினை என்று போருக்குப் பெயர். அந்தப் போராகிய பெருஞ் செயலின்