உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 கந்தவேள் கதையமுதம் முடிவில், அதில் வெற்றி பெற்றதோடன்றித் தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டான். தேவசேனாபதி என்ற திருநாமம், தேவசேனையின் தலைவனாக இருந்து பெரிய காரியத்தைச் செய்ததை யும் நினைவூட்டுகிறது. ஆகவே தேவசேனை கிரியா சக்தி ஆகிறாள். அஞ்ஞானமயமாக இருப்பவர்கள் அசுரர்கள். அவர்கள் கரிய நிறமும் கொடுமையும் உடையவர்கள். அஞ்ஞானத்தைப் போக்கு வது ஞானம். அசுரர்களை எல்லாம் அழித்த வேலாயுதம் ஞானத்தின் வடிவம். அதை ஞானசக்தி என்றும் முருகப் பெருமானை ஞான் சக்திதரன் என்றும் சொல்வார்கள். ஆகவே வேல் ஞானசக்தி. 'ஞான சக்திதராய நம: என்று அர்ச்சனையில் ஒரு திருநாமம் வருகிறது. இப்படி மூன்று சக்திகளோடும் கூட முருகன் எழுந் தருளியிருக்கிறான். வேலை ஞானசக்தி என்று சொல்வதில் ஒப்புமை இருக்கிறது. ஞானம் என்பது அறிவு. அறிவு நீண்டதாகவும், கூரியதாகவும், அகலமானதாகவும் இருக்கவேண்டும். பல காலம் கற்றுத் தெளி வது அறிவின் நீட்சி. பல நூல்களை ஆராய்ந்து தெரிந்துகொள்வது அகன்ற அறிவு. எதையும் நுட்பமாகத் தெரிந்துகொள்வது கூரிய அறிவு. திருக்குறளில், "அஃகி அகன்ற அறிவு" என்று வருகி றது. வேல் நீளமாக இருக்கிறது; கூர்மையாக இருக்கிறது; அதன் இலை அகலமாக இருக்கிறது. இவை அறிவின் இலக்கணங்கள். முருகப் பெருமானைச் சொல்லும்போது வள்ளிமணவாளன் என்றே சொல்கிறோம். நாம் எல்லாம் இறைவனால் ஆட்கொள்ளப் படவேண்டுமென்று எண்ணினாலும் எண்ணாவிட்டாலும் முருகன் நம்மை ஆட்கொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருக்கிறான். அவன் அருளைச் சுமையாகச் சுமந்து கொண்டிருக்கிறான். அதை எங்கேயாவது இறக்கி வைக்க வேண்டுமென்று விரும்புகிறான். தலை யில் பாரம் சுமக்கிற ஒருவன் அதை இறக்கி வைக்க இடம் தேடுவது போல அவன் அருளை வழங்க அன்பர்களை நாடிக் கொண்டிருக் திறான். அவனிடத்து அந்த விருப்பம் இருப்பதால்தான் நாம் உய்கிறோம். முருகன் வள்ளியை விரும்பி வந்த செல் அவ