வள்ளியம்மை திருமணம் 573 னுடைய விருப்பத்தைக் காட்டுகிறது. நாமும் அவளைப் போலவே இருக்கிறோம். தேவசேனை தேவலோகத்துப் பெண். வள்ளிநாயகி பூலோகத் தில் வாழ்ந்த பெண். ஆண்டவன் பூவுலகத்துப் பெண்ணை மணக் கிறான். அவன் மனம் இரங்கி வந்து ஆட்கொள்ளும் பெரும் கருணை உடையவன் என்பதை அது காட்டுகிறது. மற்றொன்று: வள்ளிநாயகி முயன்று இறைவனை அடையாமல் இறைவன் அவளிடத்தில் வந்து சோதனை செய்து தடுத்து ஆட் கொண்டான். நம்முடைய முயற்சி மிகுதியாக அமைவதில்லை. மிகவும் சிறந்த அன்பன் ஒருவனிடம் உள்ள அன்பைவிட இவறவனுடைய அன்பு மிகுதியாக உள்ளது. "தீர்ந்தஅன் பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி" என்பது திருவாசகம். இறைவனுடைய பெரும் கருணையால், முயற்சியினால்தான் நாம் அவனுக்கு ஆட்பட வேண்டும். அதனைக் காட்டுவது வள்ளி திருமணம். ஆகவே, தேவயானையின் திருமணத்தைவிட வள்ளி திருமணம் நமக்கு மிகவும் முக்கியம். தேவ யானையின் மணவாளன் என்பதைவிட, வள்ளி மணாளன் என்று சொல்லும்போது நம் உள்ளத்தில் அதிக உருக்கம் உண்டாகிறது. வாழ்த்து கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராணக் கதையைச் சொல்லி விட்டு, கடைசியில் வாழ்த்துச் சொல்கிறார். ஆறிரு தடந்தோன் வாழ்க! அறுமுகம் வாழ்க ! வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க! யானைதன் அணங்கு வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க! வாழ்கசீர் அடியார் எல்லாம்! (வள்ளியம்மை. 281.) வெற்பை - கிரவுஞ்ச மலையை. கூறு செய் - துண்டு துண்டாகப் பிளந்த. குடம் - கோழிக் கோடி. யானைதன் அணங்கு - தேவயானை. ஒப்பு இல்லாத ] குக் மாறு இலா - தனக்கு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/594
Appearance