உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 கந்தவேள் கதையமுதம் முதலில் ஆறிரு தடந்தோளை வாழ்த்துகிறார். அவனுடைய வீரத் தினாலே சூரசங்காரம் ஆயிற்று. ஆகவே அதற்கு மங்களாசாசனம் செய்வதுபோலச் சொல்கிறார். அதற்குப் பிறகு, கருணை ததும்ப வள்ளியை ஆட்கொண்டான். அதனால் ஆறுமுகங்களைச் சொல்கிறார். பின்பு அவனுடைய கருவிகளை எடுத்துச் சொல்கிறார். கடைசியில் மாறிலா வள்ளி வாழ்க என்கிறார். அதற்குப் பிறகு வாழ்கசீர் அடியார் எல்லாம் என்று முடிக்கிறார். $ வள்ளியை மாறிலா வள்ளி' என்கிறார், மாறு என்பது ஒப்பு. ஒப்பு இல்லாத வள்ளி என்று பொருள் கொள்ளவேண்டும். முருகப் பெருமானின் திருவுள்ளத்திற்கு மாறுபடாத வள்ளி என்றும் கொள்ளலாம். இந்தப் பாட்டில் ஆறிரு தடந்தோளும், ஆறுமுகமும் திரு அவ தாரத்தைக் குறிக்கின்றன. 'வெற்பைக் கூறு செய். தனிவேல் வாழ்க' என்பது கிரௌஞ்சாசுரன், தாரகாசுரன் ஆகியவர்களை அழித்ததைக் குறிப்பிடுகிறது. 'குக்குடம் வாழ்க, செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க' என்பது சூரபன்மன் தன் உருவம் மாறிச் சேவ லாகவும், மயிலாகவும் தோன்றி இறைவனது கொடியாகவும், வாகன மாகவும் ஆன செயலை, சூரசங்காரத்தை, குறிக்கிறது. 'யானைதன் அணங்கு வாழ்க' என்பது தேவசேனையின் திருமணத்தை நினை வுக்குக் கொண்டு வருகிறது. 'மாறிலா வள்ளி வாழ்க' என்பது வள்ளி திருமணக் கதையை நினைவூட்டுகிறது. இப்படி ஒரு பாட லில் திரு அவதாரம் முதல் வள்ளி திருமணம் வரையில் உள்ள செய்திகள் குறிப்பாகவும் வரிசையாகவும் அமைந்திருக்கின்றன. கடைசியில், இவற்றைக் கற்றுத் தேர்ந்த அடியார்கள் மிகுதியாகி அவர்கள் எல்லாம் வாழவேண்டுமென்று சொல்கிறார். இவ்வளவு சொன்ன கச்சியப்ப சிவாசாரியார் ஆண்டவன் தமக்குச் செய்த பேரருளைச் சொல்லி நூலை முடிக்கிறார். புன்னெறி யதனில் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்து நவையறு காட்சி நல்கி