வள்ளியம்மை திருமணம் என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி ஆண்ட பள்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி. 575 (வள்ளியம்மை. 262.} S (புன்னெறி - உலகியல் நெறி யாகிய அற்பமான வாழ்க்கை நெறி: துன்மார்க்கம். நன்னெறி - சன்மார்க்கம். நவை - குற்றம், இருவினை - பிறப்புக்குக் காரணமான பாவபுண்ணியங்கள்: 'இருள்சேர் இருவினை' என்பார் வள்ளுவர்.] பொல்லாத நெறியில் செல்கின்ற என்னுடைய போக்கை விலக்கி, தன்னை வழிபடும் மேலான நல்ல நெறியில் நடக்கும்படியாகச் செய்து,தன் திருக்கோலக் காட்சியைக் கொடுத்து, என்னைத் தன்னு டைய அடியனாக்கிக்கொண்டான் முருகன்' என்று சொல்கிறார். முருகனை,'பன்னிரு தடந்தோள் வள்ளல்' என்று குறிக்கிறார். கையினால் வழங்குளது மரபு. கை பல வேலைகளைச் செய்தாலும் பிறருக்கு ஈயும் செய்கை சிறந்தது. தருகை நீண்ட தசரதன் என்று கம்பர் பாடுகிறார். தசரதனுடைய கை பிறருக்குக் கொடை வழங்குவதற்காக மீண்டிருக்கிறதாம். இரண்டு கைகளையுடையவர் வள்ளலாக இருந்தால் கைகளைப் பெற்ற பயனை அடைகிறார்கள்; இரண்டு கையாலும் வாரி வழங்குகி றார்கள். முருகனோ பன்னிரண்டு கைகளை உடையவன், அவன் வள்ளன்மை மிகப் பெரியது. பன்னிரண்டு கைகளாலும் அவன் வாரி வாரி வழங்குவான். ஆதலின், 'பன்னிரு தடந்தோள் வள்ளல் என்றார். தோள் என்பது கையையும் குறிக்கும். முருகப்பெருமான் மற்றவர்களுக்கு இல்லாத பன்னிரண்டு கைகளை உடையவனாதலின், அவன் அடியார்களுக்கு அருளை வழங்க முற்பட்டால், வேறு யாரும் வழங்க இயலாத அளவுக்கு அருளுவான். ஆதலால் அவன் மாபெரும் வள்ளலாக இருக்கிறான். "வேண்டிய போது அடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாது உதவு பெருமாளே!" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றுவார். முருகனுடைய திவ்ய தரிசனத்தைப் பெற்று உயர்ந்து நின்றவர் கச்சியப்ப சிவாசாரியார். அவனை முப்போதும் திருமேனி தீண்டிப்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/596
Appearance