44 கந்தவேன் கதையமுதம் என்னுடைய நாமம் தாட்சாயணி என்று தட்சனோடு சார்ந்திருக் கிறது. என்னுடைய சரீரம் அவனால் தீயதாக்கப்பட்டிருக்கிறது. பாவத்தைச் செய்த அவனுடைய சோற்றை உண்டு வளர்ந்ததாகிய இந்தச் சரீரத்தை நான் தாங்குவது நியாயம் அன்று. இந்த நாமத் தையும், சரீரத்தையும் விட்டுவிட வேண்டுமென்று நினைக்கின்றேன்' என்று வருத்தத்துடன் கூறினாள். பெரியவர்கள் ஏதாவது ஒரு தீங்கு செய்வார்களானால் அதனால் அவர்களுக்குத் துன்பம் உண்டாகும். அந்தத் துன்பத்திற்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். அந்தப் பரிகாரம் அவர்களுக்கு மாத்திரம் அன்று ; அதனால் உலகமே நன்மை பெறும். இப்படிப் பெரியவர்களுக்கு உண்டாகின்ற தீங்கு கூட உலகத்தார்களுக்கு நன்மையாக அமையும். இந்த உண்மையைச் சிவபெருமான் கூறினான். "தேவீ, என்னிடத்தில் உனக்குச் சிறந்த பக்தி இருக்கிறது. அது மிகவும் முதிர்ந்தது. அந்தப் பக்திக்குச் சமமாக வேறு யாரும் பக்தி பண்ணவில்லை. உனக்குச் சமானமாக யாரும் இந்த உலகத்தில் இல்லை. நீ இப்போது சொன்ன மாதிரி செய்வது உன்னுடைய குற்றத்திற்குப் பரிகாரம் அன்று. உன்னுடைய குழந்தைகளாகிய உயிர்கள் உன்னை உபாசித்து வீடு பேற்றை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்கிறாய்" என்று சிவபெருமான் அருளினான். பத்திமை எம்வயிற் பழுத்த பண்பினால் சத்தியே, நிண்னிகர் சகத்தின் இல்லை; நீ இத்திறம் முயலுதல் எல்லை தீர்ந்தநின் புத்திரர் வீடுறு பொருட்டுப் போலுமால். - [எல்லை தீர்ந்த கணக்கற்ற.] (பார்ப்பதி) படலம், 5.) சேற்றிலே பிள்ளைப்பூச்சி புகுந்தாலும் அதன்மேல் சேறு ஒட்டாது. தாமரை சேற்றிலே முளைத்தாலும் தாமரைப் பூ நீருக்கு மேலாகத்தான் நிற்கும். அதன் இலையில் தண்ணீர் ஒட்டாது. எம்பெருமானிடத்தில் பக்தி உள்ளவர்கள் தீய சூழலில் இருந்தா லும் அதனால் அவர்களுக்குத் தீங்கு உண்டாகாது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/64
Appearance