உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கந்தவேள் கதையமுதம் னுடைய தோற்றத்தை மறைத்துக்கொண்டு. சிறிய குழந்தையாக நின்றாள். இவ்வாறு வடமொழிக் காந்தம் சொல்லுகிறது. நீலோத்பல மலரில் தோன்றியதாக வடமொழிப் புராணம் சொல்கிறது. தமிழ்க் கந்தபுராணம் தாமரையில் தோன்றினாள் என்று சொல்கிறது. தாமரை அம்பிகை எழுந்தருளுவதற்கேற்ற இடம். அம்பிகை பத்மாசனத்தில் எழுந்தருளி இருக்கிறாள் என்று லலிதா சகசிரநாமம் சொல்கிறது. 'பத்மாசனா' என்பது எம்பெரு மாட்டியின் திருநாமங்களில் ஒன்று. அவள் ஆறு ஆதாரங்களிலும் தாமரையில் எழுந்தருளியிருக்கிறாள். எல்லோருடைய இதய பத்மத்திலும் இருக்கிறாள். ஆயிரம் இதழ்களை உடைய சகசிரார பத்மத்தில் எழுந்தருளியிருக்கிறாள். இவற்றை எல்லாம் எண்ணிச் கச்சியப்ப சிவாசாரியார், பூம்பொய்கையில் தாமரை மலரில் எழுந்தருளியிருந்தாள்" என்று சொன்னார் என்று தோன்று கிறது. அம்பிகை சிறு குழந்தையாக எழுந்தருளியிருப்பதைப் பார்த் தான் பர்வதராஜன். அவளைக் கண்டவுடன் அவனுக்கு முதலில் மகிழ்ச்சி அல்லவா தோன்றவேண்டும்? வருத்தம் உண்டாயிற்றாம். ஏன்? அம்பிகை எப்போதும் சிவபெருமானை விட்டுப் பிரியாமல் இருக்கிறாள். இப்போது எம்பெருமானை விட்டுப் பிரிந்து வந்திருக் கிறாள். 'ஆகா,நாம் செய்த தவத்தினால் ஒரு கணம் கூடப் பிரியாத எம்பெருமானை விட்டு அம்பிகை பிரிந்து வந்திருக்கிறாளே! அம்பிகையை அப்பனிடமிருந்து பிரித்து விட்டோமே!' என்ற ஏக்கம் அவனுக்கு முதலில் தோன்றியதாம். பின்பு, "வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்' 4 . என்றபடி, என் தவத்திற்கு இரங்கிப் பெரும் கருணையினால்தான் தாய் இங்கே எழுந்தருளியிருக்கிறாள்' என்று நினைத்த போது பேரு வகை உண்டாயிற்றாம். முதலில் அவனுக்கு, 'நாம் நல்ல காரியம் செய்யலாம் என்று தவம் செய்யப் போக அம்பிகையையும், அப்பனை யும் பிரிக்கின்ற காரியம் ஆகிவிட்டதே' என்ற வருத்தம் உண்டானா லும், இவைகள் எல்லாம் நாம் செய்கிற காரியம் அல்லவே; எல்லாம் ஆண்டவன் திருவருள் அல்லவா ?' என்ற ஆறுதல் உண்டா யிற்று. அதனால் ஆனந்தக் கடலில் ஆழ்ந்தான். .