பார்வதியின் தவம் கிறது. அப்போது ஒருவனுக்குக் கனவு உண்டாகிறது. அந்தக் கனவில் திருடனைக் காண்பதுபோல ஒரு காட்சியைக் காண்கிறான். அப்போது அந்த மனம் துன்புறுகிறது. பூச்சாண்டியைக் கண்டது போன்று குழந்தை கனவு காண்கிறது. அதனால் படுக்கை நனைந்து போகிறது. மனத்தில் உண்டாகும் இன்ப துன்பம் உடம்பிலும் உறைக்கின்றன. ஆகவே மனம் இருந்தால்தான் இன்ப துன்ப அநுபவங்கள் உண்டு என்பதைத் தெரிந்துகொள்கிறோம். இந்த உடம்பு பரு உடல். இந்த உடம்பினுள் மனம் உள்ள உடம்பைத்தான் நுண் உடல் என்பர். மனந்தான் முக்கியமானது. பரு உடல் ஐந்து பூதங்களால் ஆனது. நுண் உடல் மூன்று குணங்க ளால் ஆனது. உயிர்கள் இந்த இரண்டு வகை உடலங்களையும் பெற்று வாழ்கின்றன. அம்பிகை இந்த உடலங்களைத் தருகிறாள். "ஐந்தும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறி ஆக்கும்," என்பது ஒரு பழமொழி. அதற்கு வேறு வகையில் பொருள் சொல் வார்கள். அதற்குரிய தத்துவப் பொருள் இதுதான்.பஞ்ச பூதங்கள் தோன்றி, மூன்று குணங்கள் தோன்றிய பிற்பாடு அம்பிகை உயிர் களுக்கு இரண்டு வகையான சரீரங்களையும் அளிக்கிறாள். இப்படி, உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைத் தந்து காப்பாற்று கிற அம்பிகை, இப்போது மேனைக்கும், பர்வதராஜனுக்கும் குழந்தை யாக வளர்கிறாள்; அவர்கள் சோறிட உண்டு வளர்கிறாள். இது பெரிய நாடகம் அல்லவா? அவதாரம் உயர்ந்த நிலையில் இருக்கின்ற தெய்வம் நம்மைப்போல உலகில் நடமாடினால் அது அந்தத் தெய்வத்தின் கருணையைக் காட்டும். மேலே இருந்து கீழே இறங்குவதனால் அவதாரம் என்ற பெயர் உண்டாயிற்று, தனக்கென ஒரு வடிவம் இல்லாத எம்பெருமாட்டி உலகத்திலுள்ள உயிர்க் கூட்டங்கள் உய்வுபெறவேண்டும் என்ப தற்காகப் பர்வத ராஜனின் குமாரியாக எழுந்தருளினாள். பார்வதி என்ற திருநாமத்தைப் பெற்றாள். நம்மை மேலே உயர்த்த வேண்டும் என்பதற்காக அவள் மேலே இருந்து கிழே இறங்கி அவதாரம் எடுத்தாள்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/71
Appearance